உழைப்பே உழைப்பு
கொடுநோய்ப் பட்டுக் குவலயம் தவிக்கும்
கொரானா காலத்திலும்
விடுப்பேதும் இன்றி விருப்புடன் மேனி
வியர்க்க வியர்க்க
அடுப்பங் கரையில் அயராதுழைக்கும்
அன்னையர் குலமே
தொடுக்கின் றேன்என் வாழ்த்தைத் தூய
தொழிலாளர் திருநாளில் .....