தேவதையை… தேடாதீர்கள்

எதையுமே
நேர்த்தியாக
செய்கிறாயா
அல்லது நீ
செய்வதனால்
அது நேர்த்தியாகிறதா ...?

உன்னைப் பற்றி
பேசும் போது
எப்படித்தான்
வருகிறதோ
என் குரலில்
வசீகரம் ....

நீ பூத்தொடுக்கும்
போது எனக்கு
குழப்பம் , உன்
விரலெது
மலரெது ....?

எனது பேனாவால்
ஒரு போதும்
உன் பெயரை
நேராக எழுத
முடியாது
ஏனனில்
அதற்கும் சிறகு
முளைத்துவிடுகிறது.....
உன் பெயரை
எழுதும் போது !

உன் மெலிதான
நெற்றி வேர்வையை
கைக்குட்டையால்
ஒற்றும் போது
கைக்குட்டையாகிறது
என் மனது...

மூன்றாம்
பிறையைப்
பார்த்தால்
நல்லதாம்....
நகவெட்டியால்
நீ வெட்டிய
நகங்களை
சேமித்து
வைக்கிறேன்....
தினமும்...

நீ வாசிக்கும்
போது
புத்தகத்தின்
பக்கங்களை
திருப்புவாய்...
அடுத்த பக்கம்
ஆவலோடு
காத்திருக்கும்
நீ எப்போது
ஸ்பரிசிப்பாய்
அதையுமென்று...

எல்லோரும்
வரம் வேண்டி
தவமிருந்தார்கள்
தேவதையிடம்
எல்லோருக்கும்
கிடைத்தது வரம்...
ஆனால் எனக்கு
கிடைத்தது வரமல்ல
தேவதை...!

ஆக இனிமேல்
தேவதையை
தேடாதீர்கள் !

எழுதியவர் : ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன (30-Apr-20, 10:04 pm)
சேர்த்தது : Sridharan Venkatakrishnan
பார்வை : 172

மேலே