Sridharan Venkatakrishnan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sridharan Venkatakrishnan |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 10-Jun-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 14 |
த்ரில் கதைகள் , கவிதைகள்
உயிர் ஈர்ப்பு விசை
நீ இமை
இறகுகளை
அசைக்கும் போது
நான் வானில்
பறக்கிறேன்
ஒரே சமயத்தில்
மீன்களையும்
தூண்டிலையும்
உன் விழிகளில்
பார்க்கிறேன்
நான் பிழையான
தகவலைச்
சொல்லும்போது
செல்லமான முகச்
சுளிப்போடு என்
தலையில் குட்டுவாய்
நான் இப்போது
பிழைகளை மனப்
பாடம் செய்கிறேன்
நான் கண்ணாடி
முன் நிற்கும்
போதெல்லாம் என்
உருவத்திற்கு பதில்
உன் உருவமே
தெரிகிறது அதனாலே
என் முகம் மலர்கிறது.
உன் தோழிகளுடன்
நீ வரும் போதெல்லாம்
மேகங்களுடன் இருக்கும்
நிலவுதான் நினைவிற்கு
வருகிறது
உனது ஒர விழிப்
பார்வையில் தான் என்
ஒவ்வொரு நாளும்
நகர்கிறது.
உன் விழிகளுக்கு
யார்
வானம் எழுதும்
கவிதைதான் மழை !
உழவனின் வாழ்வில்
உயிரெழுத்து மழை !
உணர்வுப் பூர்வ காதலரின்
உயிர்மெய் எழுத்தும் மழை !
நிலத்திற்கு
ஒற்றெழுத்து மழை !
நீள் மேகத்தின்
சார்பெழுத்தும் மழை !
நெடும் கடலுக்கு
வெற்றெழுத்து மழை !
நெருப்பிற்கு
முற்றெழுத்தும் மழை !
தோகை மயிலுக்கு
துணை எழுத்து மழை !
தவழும் நதிக்கு
தொடரெழுத்தும் மழை !
விதைக்கும் விதைக்கு
முதல் எழுத்து மழை !
வீதியோர வணிகனுக்கு
வினா எழுத்தும் மழை !
வீறிடும் தவளைக்கு
வினை எழுத்து மழை !
சீறிடும் பாம்பிற்கு
சுட்டெழுத்தும் மழை !
உயர்ந்த அருவிக்கு
புதிர் எழுத்து மழை !
ஊரோர குளத்திற்கு
சித்திர எ
கற்றை மலர்
குழலழகி நின்
நெற்றியிலே
ஒற்றை முடி
ஒற்றை முடி
நாட்டியங்கள்
நெற்றியெனும்
மேடையிலே
மேடையிலே
அரங்கேற்றம்
அதிர்வெல்லாம்
என்னுள்ளே
என்னுள்ளே
ஆயிரமாய்
அதிர்வலைகள்
எப்போதும்
எப்போதும்
உன் நினைவு
என்னுள்ளே
புன்னகைக்கும்
புன்னகைக்கும்
மெல்லிதழாள்
மென் கூந்தல்
மேகமாகும்
மேகமாகும்
கூந்தலென்றால்
விண்மீனே
மல்லிகையாம்
மல்லிகையாம்
பல்வரிசை
ஈரிதழ்கள்
ரோஜாக்கள்
ரோஜாக்கள்
அருகினிலே
மென் பருக்கள்
முட்களாகும்
முட்களாகும்
மணித்துளிகள்
நீ இல்லாத
நாளெல்லாம்
நாளெல்லாம்
நின் நேசம்
நெஞ்செல்லாம்
பூ வாசம் !
ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்
நேசப் பூ மலரே
நின் நினைவால்
நிதம் நானும்
நீர் தொடாத
நெடும் மரமாய்
வாடித் தவிக்கின்றேன்
விரைவாக நீ
வந்தால் இனி எனக்கு
வசந்த காலம்
வாராது போனாலோ
வருவதெல்லாம்
கசந்த காலம். !
ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்