ப்ரியமானவளுக்கு
கற்றை மலர்
குழலழகி நின்
நெற்றியிலே
ஒற்றை முடி
ஒற்றை முடி
நாட்டியங்கள்
நெற்றியெனும்
மேடையிலே
மேடையிலே
அரங்கேற்றம்
அதிர்வெல்லாம்
என்னுள்ளே
என்னுள்ளே
ஆயிரமாய்
அதிர்வலைகள்
எப்போதும்
எப்போதும்
உன் நினைவு
என்னுள்ளே
புன்னகைக்கும்
புன்னகைக்கும்
மெல்லிதழாள்
மென் கூந்தல்
மேகமாகும்
மேகமாகும்
கூந்தலென்றால்
விண்மீனே
மல்லிகையாம்
மல்லிகையாம்
பல்வரிசை
ஈரிதழ்கள்
ரோஜாக்கள்
ரோஜாக்கள்
அருகினிலே
மென் பருக்கள்
முட்களாகும்
முட்களாகும்
மணித்துளிகள்
நீ இல்லாத
நாளெல்லாம்
நாளெல்லாம்
நின் நேசம்
நெஞ்செல்லாம்
பூ வாசம் !
ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்