தாயும் குழந்தையும்

பவளச் சிரிப்பொலியே ;--என்
பச்சை ரத்தினமே ...
கவலை ஏதுமின்றி ;--என்
கண்மணியே விளையாடு
உங்கப்பா அயல் நாட்டில்
உனக்காக உழைக்கிறார்..'--என்
தங்கமே உனைப் பார்க்கப்
புலனவழி அழைக்கிறார் ..
தூக்கி விளையாடத்
துளி மலையின் சாரல் விழும்
நாக்கில் வழிந்தோடும் அந்த
எச்சிலுமே தேனமுதம்
தலைச் சாய்த்துப் பார்க்கையிலே
தாமரைப்பூ தோற்றுவிடும்
தாவிவரும் அழகைப் பார்த்து
மான்குட்டி வெட்கப்படும் ..
ஓவியமே என்தாயின்
உருவமது தெரியுதடி
உனக்காக என்னுயிரும்
வாழவேண்டும் புரியுதடி
வீட்டுக்குள் நாமிருந்து
வென்றெடுப்போம் சோதனையை
நாட்டுக்கு உறுதுணையா
நாம்தீர்ப்போம் வேதனையை ...!!!

எழுதியவர் : கவித்தலம் கை.அறிவழகன் (27-Apr-20, 11:34 pm)
Tanglish : thayum kuzhanthaium
பார்வை : 122

மேலே