உலகில் அதிசயமே
உறவின் மகிமை இன்றுதான்
மிக அருகில்
எங்கேயோ, எத்தனை மணி நேரமோ,
எத்தனை நாள்களோ,
ஏங்கி ஏங்கித் தவித்தோம், தவிக்கின்றோம்
உறவுகளின் ஏக்கத்தில் ,
ஆனால் இன்று நம்மருகே
வியந்து பார்க்கும் விதத்தில்,
ஆனந்தக் கண்ணீர்
அன்பெனும் நெகிழ்ச்சியில்
ஆகா இயற்கையின் விந்தை என்னே/
எதுவும் சும்மா கிடைத்து விடாது
பள்ளம் ஓன்று இருந்தால் தான்
மேடு என்றோரு இடம் இருக்கும்.
வேதனைகளின் விசும்பலிலும்
விநோதமும் இதுவல்லவா /
குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழ்வதையும்
அன்பின் பாலம் அமைந்த விதமும்
அதிசயமே இன்றைய உலகில் அதிசயமே
இதுதான் வாழ்கை என்பது நிஜமற்றது
இப்படியும் மாறும் என்பதுதான் வேடிக்கை