கனவுக்கும் கற்பனைக்கும் இடங்கொடுங்கள்

நிஜங்களுக்கு நிழல் ரகசியம்
நிழலுக்கு நிஜம் அவசியம்.
நமக்கு மனது தான் கைப்பிடி, அதை புறத்தே
தள்ளிபோக முடியாது ஒரு படி.

ஞாபகங்கள் இனிப்பானவை எனினும்
சிலவற்றை கொளல் கசப்பானவை
கசப்பான தருணங்கள் எதிர்மறையாய்
நம்மையே ஏமாற்றிக்கொள்ளும்.

எனவே எப்போதும் நினைவுகளை புனரமைக்க
பாஸிட்டிவ் எனர்ஜியை கைக்கொள்ள
கனவுகளிலும் வாழலாம்..கொஞ்சம்
கற்பனையையும் சேர்க்கலாம்.

இனிப்பு எனும் போது உமிழ்நீர் ஓடோடி வருவது போல
எண்ணம் சீரானால் தான் வாழ்வு.
நமக்காக வாழ்வோம் நமக்காக மட்டுமில்லை தான்
நாம் நன்றாக இருந்தால் தானே நாலு பேருக்குதவ

வெற்றுமை களைவோம் வேற்றுமை கலைப்போம்
ஒரே சிந்தனை எதிர்மறையின்றி உழன்றால்
உருப்படியாய் எண்ணம் எம்மை ஏற்றி விடும்
இல்லையெனில் போருக்குள் செல்லுமுன்பே தோற்றுப்போவோம்.!

எழுதியவர் : செல்வமணி (27-Apr-20, 11:17 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 160

மேலே