கொரானா எனும் ஆடுகளம்
எவனோ எய்த அம்பு தானென
எல்லோருமறிந்தும்
தப்பித்தோம் பிழைத்தோமென
தறிகெட்டு ஓடி ஒளிந்தோம்.
கண்ணாமூச்சி விளையாட்டு போல
கடந்தோம் ஐந்து வாரம்.
வரவின்றி செலவானாலும் வாழ்ந்தோம்
வாழ்க்கையை காக்க
எல்லோருக்கும் ஏற்றபடி இல்லையென்றாலும்
ஏதோ இந்தா ஆச்சு என பொறுத்திருந்தோம்.
அரசென்றால் ஆவன செய்தாக வேண்டும்
அத்தனை பேருக்கும் ஆனால் இல்லை
ஏமாற்றம் தான் இழப்பைத்தவிர்த்தோமென்று
எமக்குள் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டோம்
இனியாவது விடியுமாவென நோக்கும் வண்ணம்
கன்னத்தில் கைவைத்து காத்திருப்பது திண்ணம்.
இந்த அனுபவம் ஒரு எதார்த்தமற்றது எனினும்
சுகங்களெல்லாம் சோகங்களானதே
சோகங்களையும் சுகமாய் பார்த்துப்பழகிப்போக
இதுவும் ஒரு பாடம்...காலனின் கட்டாயப்பாடம்.