கற்பு
கற்பு
பாரத திருநாட்டில் எத்தனை எத்தனை
பார்த்திடு பத்தினிப் பெண்டிரவர் பெருமை
பாட் டிலும் கூத்திலும் வைத்தார் அருமை
பத்தினிசந் திரவதி காட்டையே எரித்தாளாம்
சாவித் திரியும் சத்தியவான் உயிரை
சாமர்த்தாய் மீட்டாளாம் எமனிடம் வாதாடி
நளனும் தமயந்தி விட்டு
நழுவிட காமவேட னைக்கண்ணால் எரித்தாளே
நாடு போற்றும் பத்தினி நளாயினி
அணிமாண்ட வியர்சாபம் தடுக்க உதிக்கும்
அருணனைத் நிறுத்தி புலராச் செய்தாள்
வள்ளுவன் பத்தினி வாசுகியின் கேள்வி
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்றாளே
கண்ணகி நீதியிலா பாண்டியைக்
காண்பித்தாள் மதுரையை எரித்து உலகுக்கே