தண்ணீர் தண்ணீர்

தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளதா
எனக் கேட்டுக்கொண்டு
தாய்வீடு வரும் பெண்கள்
கல்யாணத்துக்குப்பின்
தண்ணீர்குடம் சுமக்கும் ஆண்கள்
தண்ணீர் லாரி பின்
இடுப்பில் குழந்தையும்
கையில் பிளாஸ்டிக் குடத்துடன்
அலைமோதும் தாய்மார்கள்
ஆட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கிறது
இந்த காட்சிகள் மட்டும் மாறவேயில்லை

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (26-Apr-20, 12:50 pm)
Tanglish : thanneer thanneer
பார்வை : 134

மேலே