வேர்களை மறந்த கிளைகள்

நீ மகிழ்ச்சியாய் அசைந்தாட நான் இறுகிநிற்கிறேன்
மண்ணோடு மண்ணாக.

உனக்கான சத்துக்களெல்லாம்
என் மூலமே கிடைக்கிறது!
இதற்காகவே நான் இருள்மணலில். .
புதையுண்டுவாழ்கிறேன்.

அசைத்துவிட்ட காற்றோடு பேசும் சுகம்
உனக்கே கிடைக்கிறது,
ஊர்ந்து விளையாடும் அணில்சொந்தங்களும்
உண்டு உனக்கு.

செழித்து வியாபித்திருக்கும் கிளைகளே!
அனைத்தும் இல்லாமலேயே வாழ்கிறேன்.
இருந்தும் மறந்துவிட்டீர்கள் என்னை.

உன் மகிழ்ச்சியே எனதாய்
உணர்ந்தபடி நாட்கள் நகர்த்துகிறேன்.

எழுதியவர் : அருண். (2-Sep-16, 2:07 am)
பார்வை : 103

மேலே