பூக்களுக்கு எப்போ சுதந்திரம்

பூக்களுக்கு எப்போ சுதந்திரம்..??

பூக்கள்
பூத்த செடியில்
ஆடா முடியவில்லை சுதந்திரமாய்..!!

பூக்களை மலரும்
செடிக்கு இடமில்லை
இரவில் வலம் வர..!!
செடியை வணங்குவது
ஒரு கூட்டம் - செடியை வாட செய்கிறது பல கூட்டம்!!

பூவே
உன் சுவாசத்தில்
இந்த உலகம் வாசமாகிறது..
ஆனால்
அந்த வாசம் உனக்கு இல்லை..!!

மென்பொருள் உன் கையில் இருந்தாலும் - வன்பொருளையும் எடு!!
அச்சங்களை அழிக்க..!!

உன் கையில்
கணினி மட்டுமா??
கத்தியையும் எடு - உனக்காக
நீ நேதாஜி ஆகு!!

ஆயிரம்
ஆண்களின் கண்கள் இருந்தும் என்ன பயன்..!!

ஒரு கேமரா தான் ஒரு பெண்ணின் பாதுகாப்பு
எனும் போது..

வரிகளுடன்,
ஐிவி. விஜய்..,

எழுதியவர் : (4-Sep-16, 7:46 pm)
பார்வை : 41

மேலே