ஆனந்த யாலே

ஆனந்த யாலே....!!

என் பேனாவின் பெற்றோரே..
என் வரிகளின் வாத்தியாரே..
என் கவியின் ஆசானே..!!

ரம்பையையும் ஊர்வசியையும் உன் கவியால் பாட சென்றாயோ..!!
இல்லை..

சொர்க்கத்தில்
வருகை இல்லாத - காலம் என்று..

நரகத்தில் ஓசையே
கேட்டுக்க முடியாமல் - அந்த
எமனே ஆனந்தயாலை
எழுத உன்னை அழைத்து சென்றனோ..!!

தமிழை
கேட்காத காதில் - கவியால் கேட்க வைத்த காவியமே..

தந்தையின் பாசத்தை மகனுக்கு புரிய வைத்த புலவனே..!!

சிற்பிக்குள் புதைந்த முத்தைகூட வாங்கிவிடலாம் ஒன்று இழந்தால் மற்றொன்ரை..

இந்த
தமிழ் சினிமாவின்
முத்தை உன்னை எப்படி வாங்குவது..!! மீண்டும்..!!

ஆகாயத்தில் உள்ள வெற்றிடத்தை அடைக்கமுடியுமா - அதுபோல தானே..
நீங்கள் இருந்த இடமும்..!!

பறவை பறந்த பிறகு
இலை தொடங்கும்
நடனம் முடியாது - என்று
நீங்கள் சொன்னது போல்

நீங்கள்
கல்லறையில் சென்றபோதும் உங்கள் கவிதைகள்
எங்கள் செல்லுக்குள்
செல்லாமல் இசைத்து கொண்டிருக்கும்..!!

ஆழ்ந்த வருத்தத்துடன்,
வரிகளுடன்,
ஐிவி விஜய்..

எழுதியவர் : (4-Sep-16, 10:30 pm)
பார்வை : 67

மேலே