நீநீநீ

நீ..நீ..நீ..
19 / 02 / 2025

எந்தன் மீது பாயும் கண்கள்
அலைகள் தாண்டி துள்ளும் மீன்கள்
விழியெல்லாம் வழியுதே
காதல் ரசங்கள்
பருவம் வந்து பூத்த பூக்கள்
உருவம் மாறி உலவும் பாக்கள்
வழியெல்லாம் மணக்குதே
ரோஜா மலர்கள்
தீயை வாரி இறைக்கும் இளமை
நோயைத் தீர்க்கும் உந்தன் வளமை
அழைத்துப் போவாயோ
அணைத்து கொள்வாயோ நீ.. நீ..நீ

காதல் நிறைந்த மனதின் உள்ளே
காமப் புயலும் மையம் கொண்டே
உடலெல்லாம் மெலியுதே
உருகும் மெழுகாய் ஆனதே
கடந்து போகும் பாதையெங்கும்
குருதியாலே தடங்கள் பதியும்
நினைவெல்லாம் கறையுதே
நிழலாய் நீரில் மறையுதே
கரங்கள் சேரும் நாளை எண்ணி
உரங்கள் சேர்ப்பாய் காதல் கன்னி
ஓடி வருவாயே உள்ளம் நிறைவாயே நீ..நீ..நீ..

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (19-Feb-25, 8:55 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 48

மேலே