என்னவனின் அந்த ஒரு நொடிக்காக

எவருக்கும் அசையாத பாறையாய் இருந்த என்னுள்ளம்
உன் கடைக்கண் பார்வையால் கரைந்துபோனதடா

முட்களாய் இருந்த என் மனசும்
உன் பொன்சிரிப்பினால்
பூக்களாய் பூத்துக் குலுங்குகிறதடா

கலங்காத நதியாய் இருந்த நான்
உன் கரம் பிடித்ததும்
கலங்கி தவிக்கிறேனடா

எவர் குரலையும் கேட்க விரும்பாத  நான்
உன் குரலை மட்டும் கேட்க ஒவ்வொரு நிமிடமும் தவிக்கிறேனடா

எவரிடமும் பேச விரும்பாத நான்
உன்னிடம் மட்டும் பேச நினைக்கிறேன்டா

அகிலத்தில் எவருக்குமே அடங்காத  திமிரான நான் உனக்கு அடிமையாகிவிட்டேனடா

எவரிடமும் கெஞ்சாத நான் உன்னிடம் மட்டும் கெஞ்சி தவிக்கிறேனடா

எவரிடமும் மன்னிப்பு கேட்காத நான்
உன்னிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேனடா

நீ என்னை வேண்டாம் என்று வெறுத்தாலும்
நான் உந்தன் பின்னால் பாசத்தால் ஒடிவருகிறேனடா

உன் முகம் கண்டு
ஆண்டுகள் பல ஆயினும் என்றாயினும் ஒரு நாளாவது
உன் முகம் காணும்
அந்த ஒரு நொடிக்காக காத்திருக்கிறேனடா

உன் கையோடு கை கோர்த்து கால்கள் நடக்கும் அந்த ஒரு நொடிக்காக கனவுகள் காண்கிறேனடா

நித்தமும் உன்னை நெஞ்சில் சுமந்து
நீ வந்து என்னை தீண்டும்
அந்த ஒரு நொடிக்காக
காலங்கள் தோறும்
காதலுடன்
காத்திருக்கிறேனடா!!!

எழுதியவர் : M. Chermalatha (20-Feb-25, 4:07 am)
பார்வை : 77

மேலே