பேனாவின் புன்னகைப் பூ

வடிவம் 1
பேனாவின் புன்னகைப் பூக்கள்தான் என்கவிதை
தேனோடும் நின்னிதழ் சிந்திடும் செந்தமிழால்
வானோடும் வெண்ணிலாவும் மேனகாயார் என்றுபார்க்கும்
மீனோடும் மின்னல் விழி
வடிவம் 2
தேனோடும் நின்னிதழ் சிந்திடும் செந்தமிழ்
வானோடும் வெண்ணிலாவும் மேனகாயார் என்றுபார்க்கும்
மீனோடும் மின்னல் விழிஉன் கவிதைஎன்
பேனாவின் புன்னகைப் பூ