நூலின் பெயர் திரும்பிப் பார்க்கிறேன் நூலாசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் கவிஞர் அஞ்சூர்யா க செயராமன், மதுரை,
நூலின் பெயர் : திரும்பிப் பார்க்கிறேன்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிஞர் அஞ்சூர்யா க. செயராமன், மதுரை,
செல் : 94433 53273
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. பக்கங்கள் : 78, விலை : ரூ. 70
தொலைபேசி 044 24342810. / 24310769
******
“திரும்பிப் பார்க்கிறேன்” மதிப்பிற்குரிய ஐயா கவிஞர் இரா. இரவி எழுதிய நூலை எடுத்துத் திறந்து திருப்பித் திருப்பிப் பார்த்தேன், படித்தேன். எடுத்தது முதல் திருப்புவது தொடங்கியது நிறுத்தாமல் படித்து முடித்தேன். எடுத்து நிறுத்தாமல் படித்து முடித்த நூல் இது ஒன்றே.
இவர் உதவியதில் கிடைத்த அத்தனை பேரும் உயர்ந்தவர்களே. அத்தனை உயர்ந்தவர்களை திரும்பிப் பார்த்த ஐயா இரவி அவர்களும் அந்த உயரத்திற்குத் தகுந்தவர் என்பதை பார்த்த காலங்களில் அறியாததை படித்தபோது புரிந்து கொண்டேன்.
வாழ்ந்த காலங்கள் மனதில் பதிந்ததால் உதவும் எண்ணங்கள் செயலாய் வந்தது என்பதே உண்மை!
தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் உயர்ந்தவர்கள் கலைஞர், எம்.ஜி.ஆர். திரும்பிப் பார்க்காமல் உயர எண்ணுபவர்கள் தடம் அறிய தவறி விடுவார்கள்!
‘’திரும்பிப் பார்த்து
நடந்து வந்த வழியும், செல்லும் வழியும் மறக்காது!
இந்நூல் மூலம் நான் அறிந்த உண்மை!”
நன்றி!