வாழ்வியல்

மெதுவாய் நட
எண்ண ஓட்டங்களை
ஓடவிட்டபடி...

இயல்பாய் பேசு
மனமெல்லாம் ரணமாய்
வலிக்கையிலும்...

புன்முறுவல் செய்
செய்த செயலெல்லாம்
தோல்வியில் முடிந்தபின்னும்

சிந்தனை செய்
இயல்புக்குமாறான
கோணமனைத்திலும்..

புத்தகம் வாசி
சிந்தனை சக்கரம்
சுழலவிட்டபடி ..

நித்திரை செய்
நிதானமற்ற
நேரம் உணர்ந்தபின் ...

நாட்கள் நகர்த்து
வந்து போகும்
கவலை மறக்க ...

கடந்துசெல்
அசாதாரண வலிதரும்
தருணமனைத்தயும்...

மௌனம்கொள்
துன்ப நேரங்களை
கடந்துசெல்ல...

இயல்பாய் வாழ்
இயற்கையோடு
இசைந்தபடி..

எழுதியவர் : அருண் (24-Nov-17, 1:35 am)
சேர்த்தது : அருண்
Tanglish : vaazviyal
பார்வை : 212

மேலே