Reshma - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Reshma |
இடம் | : |
பிறந்த தேதி | : 29-Apr-1998 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 1219 |
புள்ளி | : 145 |
உந்தன் கரு விழி
கொஞ்சம் களங்கயில்
எந்தன் உயிர் மட்டும்
துடிப்பது ஏனோ.
இதழ் இரண்டும்
கொஞ்சம் சினுங்கயில்
ஒரு நொடி
நான் உரைவது ஏனோ
சில இரவுகள்
பல தனிமைகள்
உன் கைகளை மட்டும்
மனம் தேடுவது ஏனோ.
இன்றும் நான் நாளை யாரோ........
எல்லாம் மாயை.... எல்லாம் சிறு காலம் தான்....
குறுஞ்செய்தி பல பறந்து இருவரிடையே பரிமாணம் பல நடந்து இருக்கும்.....
வாழ்வில் இதை கடந்து இல்லாதவர் யாரும் இலர்....
என்ன தான் பேசி பொழு போகும் என்று தெரியாது ... போன் பேட்டரி சக்தி குறையும் அளவிற்கு பேசி இருப்போம்.....
வெட்டி பேச்சு தான் நடந்து இருக்கும்...
வீட்டில் அம்மாவிடம் பல முறை திட்டு வாங்கியும்,,, சண்டை போட்டும் ... தகவல்கள் பரிமாறி இருப்போம்....
போனில் பட்டன் தேயும் அளவிற்கு நேத்து முக்கியமாக தெரிந்த நபர் இன்று யாரோ ஒருவராய் மாறும் அவலம் நம்மிடையே.....
ஒரு வார்த்தை தகவல் வந்தாலும் பல
டேய் முத்து வாடா விளையாட போலாம். நேத்து எனக்கு பம்பரம் வாங்கி தந்தாருடா எங்க அப்பா, அத வச்சு விளையாடலாம். “இல்ல வேண்டாம்டா எங்க வீட்ல பல்லாங்குழி இருக்குடா அது நல்ல இருக்குடா பாக்குறதுக்கு அது விளையாடலாமா? என ஆவலோடு கேட்டான் முத்து. “டேய் அது பொட்டபிள்ளைங்க தான் விளையாடுவாங்கடா . சரி வா பச்சக்குதிர விளையாடலாம்” என சங்கர் முத்துவை இழுத்தான். பாண்டி விளையாடலாமே என தலையை சொரிந்தான் முத்து.பாண்டியா? வாயில் விரல் வைத்து யோசித்தான் சங்கர் .
“ஆமாடா அது எல்லோருமே விளையாடுறாங்களே நம்ம ஊருல அப்புறம் என்னடா வா டா "என சினுங்கினான் முத்து. இருவரும் கட்டம் போட்டு அதில் சிறு தட்டையான கல்லைப் போட்டு அதை மி
ஏலே எந்திரி , இன்னைக்கு ஞாயித்து கிழமை போயி கறி எடுத்துட்டு வா, இன்னைக்கவாது எந்திச்சு தலையில எண்ண வச்சு குளிக்கப்போலே , தாராளமா போது தாமிரபரணி தண்ணி தங்கமா அதுல போயி முங்கி எந்திச்சுட்டு வந்தா அப்படி ஒரு தாட்டமா இருக்கும் உடம்புக்கு.
போலே எந்திரிலே பொட்டக்கோழி மாதிரி இன்னும் இழுத்து மூடி தூங்கிட்டு இருக்காதலே.
“ எம்மா இன்னைக்கு தானே வீட்ல இருக்கேன் நாளு முழுக்க நாயா கிடந்து இந்த மில்லுக்குள்ள வேல பாத்துட்டு வரேன் வாரத்துல ஒரு நாள் இந்த ஞாயித்து கிழமையில கூட நிம்மதியா தூங்க விட மாட்டயா செத்தா போக போறேன் நா எந்திக்க தானே செய்வேன் ஏன் இப்படி கத்துற என கடிந்தான் "
ஏலே கிறுக்குபயலே நாளெல்லா
காதலில் விழ வைத்து
கண்ணீரில் கரைய வைத்து
என்னை உயிரோடு
எரிய வைத்து சென்ற என்னவளே!!!
நீ இப்போது எங்கே...?
இனி உன்னுடன் தான்
என் வாழ்க்கை என சொன்ன
அந்த உதடுகள் இப்போது எங்கே...?
அரைநிமிடம் பேசாமல் போனாலும்
எனக்காக கண்ணீர் சிந்தும்
அந்த விழிகள் இப்போது எங்கே...?
நெடுந்தூரம் என் விரல் பிடித்து
என்னுடன் நடந்து வந்த
அந்த நிழல்கள் இப்போது எங்கே..?
உந்தன் மடி சாயும் நேரமெல்லாம்
எந்தன் தலை கோதும்
அந்த விரல்கள் இப்போது எங்கே..?
நான் கலங்கி நிற்கும்
போதெல்லாம் தோள் சாய்த்து
ஆறுதல் சொன்ன அந்த
வார்த்தைகள் இப்போது எங்கே...?
கோபத்தால் பற்றி எறியும்
என் கன்னங்களை
கோடி முத்
வா அன்பே!!!
ஏப்பொழுதும் உன்னை காண
நான் வருவேன்
இன்று மாற்றமாக என்னை காண
நீ வந்தமைக்கு நன்றி காதலியே...
எப்படி இருக்கிறாய் என்று கேட்க
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!
உனக்காக ஒரு கவிதை பாட
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!
உன்னை கட்டியணைத்து கதறி அழ
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!
உன் மேல் கொண்ட காதலை மீண்டும்
உன்னிடம் சொல்ல ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!
உன் விழிகள் சிந்தும் கண்ணீரை
துடைக்க மனம் ஏங்குகின்றது
ஆனால் முடியவில்லையே!!!
உன் நெற்றி மேல் இறுதியாக
என் இதழ் பதிக்க ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!
தாமதமாக வந்துவிட்டாய் பெண்னே.
நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....
நிழல் போல் நானும்
உன் நினைவுகளின் பின்னே போகிறேன்...
என் குறுந்தாடிகாரா....
நீயில்லா இடங்களை நிரப்புமோ
உன் குறுந்தகவல்களும்.
என் தொலைதூரமானவனே....
என் அருகில் வருவாயோ
தனிமையில் நான்சாயும்
சுவர்களும் நீ ஆகமாட்டாயோ ....
தொட்டித்தீவில் இருக்கும் என்
பொம்முக்குட்டியே..
கன்னக்குழியழகியே..
முழிக்கும் முழியழகியே ..
பொக்கைவாய் சிரிப்பழகியே ..
உன் தீவில் எனக்கும்
இடமுண்டா ஓர் ஓரத்தில் நானும் உறங்கிட ....
தூக்கத்தில் நீயும் சிரிக்கையில்
கடவுளும் வருவாரோ உன் கனவில்
வந்தால் என் வேண்டுதலை எனக்காக
நீயும் சொல்வாயா...
'அம்...ம்ம்..மா....'என்று நீயும் அழைக்கையில்
எல்லா கவிதையும் தோற்றுப்போகிறது...
அப்படி நீஅழைக்கவே காத்திருப்பேன்
தொட்டித்தீவின் எல்லையிலே...
கொட்டும் மழையிலும் கண்ணீர் சிந்துவாரோ
கடவுளும் எனக்கு...
என்னை கடந்து
விரைந்து போகும் மக்கள்
போகிற போக்கில் ரொட்டித்துண்டை
போடுகிற அவர்களின் பாசமும் இல்லையோ
முகம் தெரியாது போன
என் தாய் தந்தைக்கு ....
வீட்டு வாசலில் ஏங்கிநிற்கிறேன்
அம்மா குழந்தைக்கு சோறூட்டுகையில்...
சோருக்காக அல்ல ...
அம்மாவிற்காக ......
ஒரு பண்டிகை நாளன்று ...
கடைத்தெருவுக்கு போயாச்சு....
கையில் கொடுத்த இருபது ரூபாயும்
இருக்குதான்னு இருபது முறை பாத்தாச்சு...
இவ்வளவு தொகையில் என்ன பொருள் நான் வாங்க...
நல்லா இல்லனு ஒரு கடை ...
இந்த தொகையிலே இல்லனு ஒரு கடை....
இப்படி எல்லா கடை வாசலிலும் ஏறி இறங்கியாச்சு...
பெரிய சாமான் வச்சு நான் விளையாடிட ஒரு ஒத்திகை பார்க்கத்தானோ....
இந்த சின்ன சின்ன சாமானெல்லாம் நான் வாங்கினேனா?
இந்த வடிகட்டிய பார்த்ததும் வடிகட்டி நின்னுச்சு மனசு...
சாயங்காலம் அம்மா போடுற டீ...
என் பொம்மைக்கு அம்மாவாகி நானும் டீ
போடப்போறேன்னு...
காசு கொடுத்து வாங்கிட்டேன்......
இந்த வடிகட்டியும்..