கல்லறையிலும் என் காதல்

வா அன்பே!!!

ஏப்பொழுதும் உன்னை காண
நான் வருவேன்
இன்று மாற்றமாக என்னை காண
நீ வந்தமைக்கு நன்றி காதலியே...

எப்படி இருக்கிறாய் என்று கேட்க
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உனக்காக ஒரு கவிதை பாட
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உன்னை கட்டியணைத்து கதறி அழ
ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உன் மேல் கொண்ட காதலை மீண்டும்
உன்னிடம் சொல்ல ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

உன் விழிகள் சிந்தும் கண்ணீரை
துடைக்க மனம் ஏங்குகின்றது
ஆனால் முடியவில்லையே!!!

உன் நெற்றி மேல் இறுதியாக
என் இதழ் பதிக்க ஆசையாக உள்ளது
ஆனால் முடியவில்லையே!!!

தாமதமாக வந்துவிட்டாய் பெண்னே...

அன்று நான் கொடுத்த ஒற்றை மலரை
தூக்கி எறிந்து விட்டு
இன்று வட்டியும் முதலுமாய்
என்னிடம் வந்து சேர்கிறாயோ????
மலர்வளையமாக!!!!

காலம் கடந்து விட்டது கண்னே..

என் காதல் மடிந்து விட்டது உன்னில்...
என் உயிர் வடிந்து விட்டது மண்ணில்...

நான் செல்லும் இந்த பயணத்தில்
உன்னை விட்டு பிரிந்து
தனியாக போகிறேன்!!!
போகும் வழியில் நிம்மதி கொள்ள
எனக்கு தேவையான அளவுக்கு
உந்தன் அழகான நினைவுகளை
எடுத்துக் கொண்டு செல்கிறேன்...!

காதலியே,

என் உடல் இன்று கல்லறையில்...
என் உயிர் என்றும் உன் அருகில்...

உண்மை காதல் சேறும் இடம்
கல்லறைதானோ???

அந்த கல்லறையிலும் உன்னை காதலிப்பவனாக,
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (16-Sep-18, 6:48 pm)
பார்வை : 1042

மேலே