திருமதி நங்கை _ பாகம் 1

டேய் முத்து வாடா விளையாட போலாம். நேத்து எனக்கு பம்பரம் வாங்கி தந்தாருடா எங்க அப்பா, அத வச்சு விளையாடலாம். “இல்ல வேண்டாம்டா எங்க வீட்ல பல்லாங்குழி இருக்குடா அது நல்ல இருக்குடா பாக்குறதுக்கு அது விளையாடலாமா? என ஆவலோடு கேட்டான் முத்து. “டேய் அது பொட்டபிள்ளைங்க தான் விளையாடுவாங்கடா . சரி வா பச்சக்குதிர விளையாடலாம்” என சங்கர் முத்துவை இழுத்தான். பாண்டி விளையாடலாமே என தலையை சொரிந்தான் முத்து.பாண்டியா? வாயில் விரல் வைத்து யோசித்தான் சங்கர் .
“ஆமாடா அது எல்லோருமே விளையாடுறாங்களே நம்ம ஊருல அப்புறம் என்னடா வா டா "என சினுங்கினான் முத்து. இருவரும் கட்டம் போட்டு அதில் சிறு தட்டையான கல்லைப் போட்டு அதை மிதிக்க நொண்டி அடித்து சென்று பாண்டி விளையாடினர். விளையாட்டின் ஒரு பகுதியில் முத்து கண்னை மூடியபடி கட்டத்தில் கால வைத்து சரியா? சரியா? என கேட்டப்படி நடக்க. சங்கரும் சரி சரி என்றே சொன்னான்.

ஆம் முத்துவும் சரி தான் இது என்றே வளர்ந்து வந்தான் மன்னிக்கவும் வளர்ந்து வந்தாள். தோற்றம் ஆணாக இருக்க தன் மனத்தேற்றம் பெண்ணாக இருப்பதை வளர வளர உணர்ந்தான். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தயங்காமல் குடும்பத்தில் வெளிப்படுத்தினான் குடும்த்தார்களின் வார்த்தைகளால் காயப்பட்டான், தினமும் செத்துப்பிழைத்தான். ஆனாலும் அவன் வீட்டைவிட்டு வெளியில் செல்ல விரும்பவில்லை. வீட்டுக்குள் விலங்காக நடத்தப்பட்டான். சண்முகம் சார் தான் இவனுக்கு ஒரு அனுசரணை, முத்துவின் அப்பாவிற்கு நெருங்கிய நண்பர் சமூக ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி, சமூக சிந்தனையாளர், இப்படி சமூகத்திற்கா வாய்திறக்கும், கை ஓங்கும் நல்ல மனிதர். முத்துவின் முடங்கிப்போன வாழ்க்கை சண்முகம் சார்க்கு நன்றாகவே தெரியும். எவ்வளவோ தனது நண்பரும் முத்துவின் அப்பாவும் ஆனா ராமையாவிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. சரி இவன் வாழ்க்கைக்கு நாம் தான் முயற்சி செய்து நல்வழி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து. முத்துவிடம் பேச துணிந்தார் சண்முகம் சார். முத்து பழைய பாதி இடிந்த செயல்படாத அந்த ஓட்டபள்ளிக்கூடத்தின் வாசலில் தினமும் அமர்ந்து இருப்பது வழக்கம். வீட்டில் இருப்பதைவிட இங்கு தான் தனிமையில் அமர்ந்து இருப்பான்.பத்து வரை மட்டுமே படிக்க முடிந்த முத்து ஏதேனும் புத்தகம் படிப்பது அல்லது தென்னை கீற்றை எடுத்து வந்து கீற்றுகளில் இருந்து ஈக்குகுச்சிகளை பிரித்து எடுத்து துடைப்பம் செய்து விற்பது போன்று, அல்லது கூடை போடுதல் போன்று எதாவது கைவேலை செய்து கொண்டே இருப்பான்.


அன்றும் வழக்கம் போல் ஓட்டப்பள்ளிக்கூடத்தில் இருந்தான் முத்து கையில் அக்னி சிறகுகள். "என்ன முத்து இங்க தான் நீ இருப்பன்னு தெரியும் அதா நானே உன்ன தேடி வந்துட்டேன்னு சொல்லியபடி சண்முகம் சார் வந்தார். “ சண்முகம் சார் நீங்க ஏன் இங்க வந்தீங்க சொல்லியிருந்தா நானே வந்துருப்பனே என்று எழுந்தான்." பரவாயில்லை உட்காரு முத்து. நல்ல காத்து அடிக்குதுலா அமைதியா இருக்கே இந்த இடம் என்று சிரித்து ரசித்த படி சுற்றிப்பார்த்தார் சண்முகம் சார்.
“ஆமா சார் நிம்மதியிலலாத என்னோட வாழ்க்கையில எதோ கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறது இந்த இடம் தா” என்று கண்கலங்கினான். சண்முகம் சார் முத்து கையை பிடித்து அட என்ன இது ஏன் கலங்குற, தனிமைய விட்டு வெளியே வா கொஞ்சம். தனிமை சில நேரம் தான் இனிமை பல நேரங்களில் அது கொடுமை என விவரித்தார் சண்முகம் சார்.
" உன் தலையில உன்னோட பிறப்பும் வாழ்வும் இப்படி தான்னு இருக்கு அப்படின்னா அதுக்கு நீ என்ன பண்ணமுடியும். சரி நா ஒன்னு சொல்றேன் அத கேட்பயா நீ என்று சண்முகம் சார் முத்துவிடம் அன்பாய் கேட்டார்.

தொடரும்.....
சுட்டித்தோழி சுபகலா

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (3-Oct-18, 10:08 am)
பார்வை : 133

மேலே