பல்லுக்கு மரியாதை
![](https://eluthu.com/images/loading.gif)
அடியே தங்கம், இங்க வாடிச் செல்லம்.
இதோ வந்திட்டேன் மாமா. எதுக்குக் கூப்புட்டீங்க?
நான் வெளியில போறதத் தெரிஞ்சும் நீ வீட்டுக்குள்ளயே இருந்தா என்னடி அர்த்தம்.
சொல்லுங்க மாமா.
என்னத்த சொல்ல. நான் வாசப்படியத் தாண்டறபோது நீ வெளிலிருந்து என் எதிரல வர, நான் உன் முகத்தைப் பாத்துட்டுத்தானே போவேன். அது மறந்துபோச்சா உனக்கு?
அய்யய்யோ நான் எதோ நெனப்பில இருந்திட்டேனுங்க.
உன்னோட சிரிச்ச முகத்தையும் எடுப்புப் பல்வரிசை அழகையும் பாத்துட்டுப் போனாத்தான் நான் நெனைக்கிற காரியம் எல்லாம் வெற்றிகரமா நடக்கும். நான் எதுக்கு உன்னக் கல்யாணம் பண்ணிட்டேங்கறத நீ மறந்துட்டயா?
இல்லங்க மாமா. இருந்தாலும் அதை இன்னோரு தடவ சொல்லுங்க. எங் காது குளிரக் கேக்கணும்.
என்னோட சாதகப்படி நான் நல்ல செவப்பா பல்லு எடுப்பா வாயை மூடினாக்கூட வெளில தெரிற மாதிரி இருக்கற பொண்ணக் கட்டுனாத்தான் என்னோட வாழ்க்கை மகிழ்ச்சியா, செல்வாக்கா இருக்குமாம். உம் பல்லுக்கு மரியாதை குடுத்துத்தான்டி செல்லம் உன்னக் கல்யாணம் பண்ணீட்டேன்.
மாமா, இதக் கேட்டு காதெல்லாம் இனிக்குதுங்க மாமா. காதலுக்கு மரியாதை குடுத்து போராடிக் கல்யாணம் பண்ணிக்கறவங்களப்பத்தி இந்த உலகத்துக்கே தெரியும். பல்லுக்கு மரியாதை குடுத்து என்னக் கல்யாணம் பண்ணி அஞ்சு வருசம் ஆகுது. இதுவரைக்கும் என்ன ஒரு வார்த்தை திட்டினதில்ல. நாங் குடுத்துவச்சவ மாமா.
சரி எங்கிட்ட உனக்குப் பிடிச்சது என்னடி செல்லம்?
எஞ் சாதகப்படி சில அரசியல்வாதிங்க தலை மாதிரி நல்ல பெரிய தலையா உள்ளவர நாங் கல்யாணம் பண்ணீட்டத்தான் எனக்கு ஆயுள் கெட்டியாம். கண் கலங்காம மகிழ்ச்சியா இருப்பேனாம். என்ன பொண்ணுப் பாக்க வந்தபோது உங்க பெரிய தலையப் பாத்த ஒடனே நீங்கதான் என் கணவர்னு முடிவு பண்ணீங்க மாமா. ஆண்டவன் புண்ணியத்தில நீங்க எனக்கு கணவரா அமைய போன சென்மத்தில என்ன புண்ணியஞ் செஞ்சோனோ. உங்க பரங்கிக்காத் தலைய பாத்துட்டே இருக்கணும் போல ஆசையா இருக்குதுங்க மாமா.
அடியே தங்கம். இப்ப எங் காதில தேனா இனிக்குது உம் பேச்சு. சரி நேரம் ஆச்சு வர்றேன்.
பத்தரமாப் போயிட்டு நல்லபடியா சீக்கரம் வாங்க மாமா.