வாழ்க்கை ஒரு இரவல்

நேரம் அதிகாலை மூன்று மணி இடம் களக்குடி, உ.மங்கை

காலை மூன்று மணியளவில் நல்ல மழை ஆற்றில் நீர் பெருக்கு எடுத்து வெல்ல பெருக்காக ஓடுகிறது, இதை பார்த்த பல்லகுடும்பர் என்பவர், தனது வயலில் நீர் பெருக்கு எடுத்து தேங்கி நின்றால் பயிர்கள் அனைத்தும் வீணாக போய்விடும் என்று அவசர அவசரமாக கொட்டும் மலையில், வீட்டை விட்டு கிளம்பினார், இதை கண்ட பள்ளகுடும்பரின் மனைவியும் மாமா நானும் வருகிறேன் எங்கு போகிறிர்கள் என்று கூற, இதற்க்கு பள்ளகுடும்பர் ஏமா நீ வர வேண்டாம் நான் போய் தண்ணியை வகுந்து விட்டு வருகிறேன் என்று கூறினார், உடனே இவர் பல்லகுடும்பனரின் மனைவியான இந்திராணி இருங்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடுகிறாள் ஓடி போய் சுவற்றில் தொங்கிய சாக்கை எடுத்து கொங்கானி போல் மடித்து தனது கனவரிடம் குடுத்து போக சொன்னால், பின்பு அவரது கணவனும் தனது இன்மையான இதழ்களால் புன்னகைத்து போய் வருகிறேன் என்று கூறி விட்டு, வீட்டின் தலை வாசலை தாண்டினார். அப்பொழுது வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை பாரமல் மிதித்து தனது மனைவியின் முன்பே துடி துடித்து இறந்து போனார் இதை கண்ட அவரின் மனைவியான இந்திராணி அதிர்ச்சியில் புத்தி பேதலித்து போனால். காலை 10 மணியாக ஆனது, மழை நின்று இயல்பு நிலை திரும்ப மக்கள் அனைவரம் நடமாட ஆரம்பித்தார்கள் அபொழுது ஒரு கூன் கிழவன் பள்ளகுடும்பனாரின் வீட்டு வழியாக வர அறுந்து கிடந்த மின் கம்பியையும் பள்ளக்குடும்பன் இறந்து கிடப்பத்தையும் பார்த்து வேகமாக ஓடி வந்தார் வந்ததும் கூச்சலிட்டு மக்களை திரட்டினார், மக்கள் அனைவரும் ஆரவாரமாக என்னாச்சு என்னாச்சு என்று கூச்சலிட்டு ஓடி வந்தார்கள். அங்கு வந்து பார்த்ததும் பள்ளகுடும்பர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்து போய் நின்றனர். அதில் ஒரு சிலர் உடனே மின்சார அலுவலருக்கு அழைப்பு விடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்து பள்ளக்குடுபனாரின் உடலை மீட்டனர், உடலை மீட்டதும் பள்ளக்குடும்பனாரின் மகனான தேவேந்திரனுக்கு அழைப்பு விடுத்தனர், அழைப்பு விடுக்கும் முன் தேவேந்திரனின் செயல்கள் தேவேந்திரன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டு வந்தநிலையில் மறுநாள் பல்கலைக்கழகம் தேர்வுக்கு தன்னை தயார் படித்துக்கொண்டு இருந்தான் சரியாக 1 மணியளவில் சாப்ட தனது தட்டை அலம்பிவிட்டு வரிசையில் சாப்பாடு வாங்குவதற்காக நின்றுகொண்டு இருந்தான் அந்த வேளையில், ஒரு அழைப்பு மணி தேவேந்திரனுக்கு வர அந்த அழைப்பை எடுக்காமல் எதோ பேரு இல்லா அழைப்பு என்று எடுக்காமல் இருந்து விட்டான் தேவேந்திரன், சிறிது நேரம் கழித்து தேவேந்திரனின் நண்பனுக்கு அழைப்பு வந்தது வந்த அழைப்பை எடுத்து ஹலோ யாரு என்று கேக்க, ஒரு குரல் அழுதுக்கொண்டு தேவேந்திரன் இருக்கனாப்பா என்று கேக்க இவனும் ஆம் அவன் சாப்ட போயிருக்கான் என்னனு சொல்லுங்க நீங்க யாரு ஏன் ஒரு மாரியா பேசுறிங்க என்னாச்சு என்று கேக்க அதற்க்கு ஒரு வார்த்தைகளில் தேவேண்டிரனின் நண்பன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை பூமித்தாயின் மடியில் விழவைத்தது, பேசிக்கொண்டே உரத்த குரலில் கத்திக்கொண்டு தேவேந்திரா என்று செல்லை கூறிக்கொண்டு செல்லை கீழே போட்டுவிட்டு மெசை நோக்கி ஓடிவந்தான் அப்பொழுது தேவேந்திரன் சாப்பாட்டை கையில் இருந்து முதல் வாய் எடுத்து வைக்க, இதை பார்த்த அவன் நண்பன் ஒன்றும் கூறாமல் மவுன அழுகையாக கண்ணீர் பெருகி ஓடுயது இதை பார்த்த அனைவரும் எனாச்சு என்று அவனிடம் பலரும் கேக்க ஒன்றும் கூறாமல் அழுதான். அவன் தேவேந்திரன் சாப்டு முடித்ததை பார்த்ததும் உடனே ஓடி போய் தேவேந்திரனிடம் அப்பாவுக்கு முடியல்லையாம் உடனே போய் கிளம்பு நான் தட்டை கழுவி வைத்து விட்டு வரேன் நீ போய் ரெடியா இரு என்று கூறினான். உடனே தேவேந்திரனின் கண்கள் கலங்க ஆரம்பித்தது, நண்பனிடம் என்னாச்சு டா அப்பாவுக்கு என்று கேக்க அப்பாவுக்கு முடியலையாம் வேகமாக கிளம்பு என்று கூறினான் இதை கேட்டவுடன் அழுதுக்கொண்டே கிளம்பினான். அவனது நண்பனும் வேகமாக கிளம்ப ஏய் நீ வரவேண்டாம் டா மச்சான் நாளைக்கு தேர்வு இருக்குல நீ இரு நான் போய் அப்பாவுக்கு நால்லா ஆனதும் அழைப்பு விடுக்கிறேன் அப்போது வா என்றான் உடனே இவன் நான்பனுக்கு உச்சக்கட்ட அழுகை வந்து அவனை கட்டி அனைத்து அப்பா இறந்துட்டார் டா மச்சான் என்று கூறினான், இதை கேட்ட தேவேந்திரன் விடுதியே அலறும்படி கத்தி அழுக பக்கத்தில் இருந்த அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். உடனே அங்கு இருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றனர். தனது ஊரில் இறங்கியதும் தேவேந்திரனை கட்டி அனைத்து அவனின் சொந்தத பந்தம் அனைவரும் அழுக. அவனுக்கும் கட்டுபடுத்தாத அழுகை இதை பார்த்த அவனின் நண்பன், தனது நண்பன் சுய நிலையில் இல்லாதாதை அறிந்த அவன் அனைத்து காரியங்களையும் முன்நின்று பார்த்து அடக்கம் செய்தான். பின்பு அவனின் தாயார் புத்தி பேதலித்து போனது அவனுக்கு தெரிய வர தேவேந்திரனால் தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு சோகம் தாக்கத்தின் மேல் தாக்கியது. இதை அடுத்து அவனின் நண்பனும் வீடு திரும்பினான் சிறுது நாட்கள் கழிந்தன அன்றாட நாட்களின் உணவுக்கும் கல்லூரி செல்லுவதற்கும் பணம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டு சேர்ந்து போனான். பின்பு சமையல் அறைக்குள் சென்று சமைக்க சென்றான் சமைக்கும் போது, தன் அம்மா அடுப்பாங்கரையில் சமைத்த நினைவுகளும் தோசையை சுடசுட தனது தட்டில் எடுத்து வைத்த நினவு துளிகள் தோன்ற, தேவேந்திரனின் கண்களில் இருந்து கண்ணிர் துளிகள் வெல்ல பேருக்கு எடுத்தது. அதையும் மீறி சமைத்து முடித்ததும் தனது புத்தி பேதலித்து போன அம்மாவிற்கு ஊட்டி விட்டு தனது கண்ணிற்கு ஆறுதல் கூரிகொண்டான். அன்று இரவில் தூக்கமும் வரவில்லை அவரின் அப்பாவின் நினைவுகளும் எப்படி வாழ்கையில் வரக்கூடிய நாட்களை சமாளிக்க போரம் என்று மாறி மாரி நினைவுகள் தோன்ற ஆரம்பித்தது. அன்று இரவு ஒரு முடிவு எடுத்தான் தனது அப்பா செய்த உழவு தொழிலையே செய்வோம் என்றும் படிப்பை நிறுத்தி விடுவோம் என்று நோட்டை எடுத்து ஒரு பட்டியல் எடுத்துகொண்டு அதை நாளையில் இருந்து பின் பற்றுவோம் என்று ஒருதலை மனதோடு உருதிசெய்துகொண்டன். மறுநாள் அதிகாலை நேரம் ஒரு அழைப்பு வந்தது அழைப்பை எடுத்து ஹலோ என்று கேக்க அவன் நண்பன் என்னடா மச்சான் பண்ணுற அம்மாவுக்கு இப்ப எப்டிடா இருக்கு என்று கேக்க, அவனுக்கு இதை கேட்டதும் கண்களில் கண்ணீர் பெருகியது சொந்த பந்தம் ஆயிரம் இருந்து தன்னிடம் வந்து என்ன ஏது என்று கேக்கமால் இருக்கும் நிலையிலும் நண்பன் கேக்கவும் கண்களில் பெரியது நீர். உடனே அவனிடம் அவனது முடிவகளை கூற, அவன் நண்பன் இல்ல மச்சான் நீ படிட நான் நம்ம அம்மாட்ட பேசிருக்கேன் பீச நினச்சு கவலை படாத என்று கூற, அதுக்கு தேவேந்திரன் வேண்டாம் டா மச்சான் நான் இங்க அம்மாவின் நிலையம் சரி இல்ல அதுனால அம்மாவை பார்த்துக்கொண்டே விவசாயம் செய்கிறேன் என்று கூறினான். இதற்க்கு மறு கருத்து எதுவும்தெரிவிக்காமல் சரிடா மச்சான் பார்த்து கவனமாக இரு என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (2-Oct-18, 7:42 am)
சேர்த்தது : சண்முகநாதன்
பார்வை : 412

மேலே