நம்பித்தான் ஆகவேண்டும்

சில விடயங்களை வாழ்க்கையில் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதை அடிக்கடி நான் நினைப்பதுண்டு அது போன்றுதான் அன்றய தினம்; எனது நினைவு தெரிந்த காலம் முதல் எந்த பெண்ணின் அருகிலும் நான் தூங்கியது இல்லை எனது அம்மாவை தவிர, அன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகமான தூங்கும் நாள், விடிந்து சிறிது நேரம்தான் கடந்து இருக்கும், முதல் முதலாக எனது வீட்டில் ஒரு அழகிய இளம் பெண் என்னை எழுப்புகிறாள். ம்ம் நேற்று வந்த எனது மனைவி தான் அவள், அந்த நினைவுகள் இன்னும் கண் முன் தோன்றுகின்றன, எழுந்து குளித்துவிட்டு இருவரையும் வருமாறு ஒரு சப்த்தம் கேட்கிறது ஆம் அது எனது தாயின் குரல்.

அன்றில் இருந்து எண்களில் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்புணராகிய அந்த பெண் எங்களோடு பயணிக்கிறான். எத்துணை ஏற்ற தாழ்வுகள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போதும் எங்களோடு அவளும் சேர்ந்துகொள்கிறாள். சந்தோச காற்று எங்கள் பக்கமும் வீசியது. எங்களுக்கும் ஒரு அழகிய இளவரசி உருவானாள். அந்த குட்டி இளவரசியோடு அவளில் பயணம் அங்கு பயணிக்கிறது. பெண்கள் அதிகம் நிறைந்ததும் பெண்களை அதிகம் மதிக்கும் குடும்பம் எங்களுடையது.

இவர்கள் அனைவரையும் பிரிந்து எனது வாழ்க்கை மீண்டும் தனிமையில் வெளி நாட்டில் தொற்றிக்கொண்டது. எது எவ்வாறு இருந்தாலும் இன்னும் நான் சில விடயங்களை வியப்புடன் பார்க்கிறேன். நான் திருமணம் முடித்துவிட்டேன் என்பதே ஒரு பெரிய வியப்பாக இருக்க மூன்று வருடங்கள் கழிந்து விட்டன அதனுடன் எனக்கு ஒரு மகளும் இருக்கிறான் என்று என்னும் பொது வியப்பின் உச்சத்தை தொட்டு நிக்கிறேன்

உண்மைதான் சில விடயங்களை வாழ்க்கையில் நம்பித்தான் ஆகவேண்டும்.

எழுதியவர் : மபாஸ் பரீட் (1-Oct-18, 4:43 pm)
சேர்த்தது : மபாஸ் பரீட்
பார்வை : 267

மேலே