திருமணம்

இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது
வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான் இஷா தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.

சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகிறது. அதிக நேரம் தாமதிக்காமல் எழுந்து வந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான், அன்று மட்டும் எதோ ஒன்று என்னை அழுத்தி பிடித்துக்கொண்டது. தொழுகை சம்பூரணமாக முடிந்தது.

அதுவரை சரியாக பார்த்துக்கூட இல்லாத மனிதர்கள் அதிகமானவர்களை அன்று நான் பார்த்தேன். ஒரு மௌலவி என்னுடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு எதோ சொன்னார் என்னிடமும் சம்மதங்கள் கேட்டார். இறுதியில் நல்லதொரு மார்க்க பிரச்சாரம் நிகழ்த்தினார். அந்த இடத்தில கூடி இருந்த மனிதர்களில் அதிகமானவர்கள் என்னை வாழ்த்தி விட்டு வீடு சென்றனர்.

இறுதியாக நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும் இன்னும் சில புதிய மனிதர்களும் என்னுடைய வீட்டை நோக்கி புறப்பட்டோம். அஙகே சில மார்க்க சம்பிரதாயங்களுக்கு பிறகு என்னிடமிருந்த ஒரு தொகை பணத்தை ஒத்த தங்கநகையை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்து என்னுடைய கரத்தில் அந்த பெண்ணையும் ஒப்படைத்தார்கள்.

இத்தனையும் முடிந்ததட்க்கு பிறகு ஒருவர் கூறினார் அல்ஹம்துலில்லாஹ் இவரின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று.
ஆமாம் இன்று அந்த நல்ல காரியம் முடிந்து 3 வருடங்கள்.

எழுதியவர் : (1-Oct-18, 12:26 pm)
சேர்த்தது : மபாஸ் பரீட்
Tanglish : thirumanam
பார்வை : 298

மேலே