அந்த குழந்தையை மட்டும் காணோம்

ஒரு பண்டிகை நாளன்று ...
கடைத்தெருவுக்கு போயாச்சு....

கையில் கொடுத்த இருபது ரூபாயும்
இருக்குதான்னு இருபது முறை பாத்தாச்சு...

இவ்வளவு தொகையில் என்ன பொருள் நான் வாங்க...

நல்லா இல்லனு ஒரு கடை ...
இந்த தொகையிலே இல்லனு ஒரு கடை....
இப்படி எல்லா கடை வாசலிலும் ஏறி இறங்கியாச்சு...

பெரிய சாமான் வச்சு நான் விளையாடிட ஒரு ஒத்திகை பார்க்கத்தானோ....
இந்த சின்ன சின்ன சாமானெல்லாம் நான் வாங்கினேனா?

இந்த வடிகட்டிய பார்த்ததும் வடிகட்டி நின்னுச்சு மனசு...
சாயங்காலம் அம்மா போடுற டீ...

என் பொம்மைக்கு அம்மாவாகி நானும் டீ
போடப்போறேன்னு...
காசு கொடுத்து வாங்கிட்டேன்......
இந்த வடிகட்டியும்...
அம்மாகிட்ட திட்டையும்...
இன்னிக்கு
எல்லாமே அப்படியே இருக்கு...
அந்த குழந்தையை மட்டும் காணோம்?!

எழுதியவர் : ரேஷ்மா (12-Jun-18, 4:04 pm)
பார்வை : 1064

மேலே