கீர்த்தி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கீர்த்தி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 16-Sep-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 1012 |
புள்ளி | : 227 |
உன் மனதின்
பக்குவத்தாலோ என்னவோ?
நான் கவலை ஏதுமின்றி
தலை சாய்கிறேன்
உன் மார்பில்
ஒரு குழந்தையாய்...
ஒரு துளி மழை நீர்
இதயத்தைப்
பூரிக்க செய்யும்...
அதே ஒரு துளி நீர் தான்...
சிறிது உப்பு கலந்து
வரும்போது
என் இதயம்
துண்டு துண்டாய்
உடைந்த வலியைத் தரும்...
அது அவள் விழிகளில்
வழியும் கண்ணீர்...
ஒரு துளி மழை நீர்
இதயத்தைப்
பூரிக்க செய்யும்...
அதே ஒரு துளி நீர் தான்...
சிறிது உப்பு கலந்து
வரும்போது
என் இதயம்
துண்டு துண்டாய்
உடைந்த வலியைத் தரும்...
அது அவள் விழிகளில்
வழியும் கண்ணீர்...
குருவி குளிக்க
குழிநீர் போதும்
எறும்பு உண்ண
ஒரு பருக்கை போதும்
அரும்பு மலர
ஒரு மழைத்துளி போதும்
இரவு மிளிர
ஒரு நிலவு போதும்
என் இதயம் மலர
உன் ஓரவிழிப் பார்வை ஒன்று போதும் !
10-ஜூன்-2020
நண்பன் ஜெயமோகன்...
அவனது பிறந்தநாளில்...
குதூகலம் என்னையும்
தொற்றிக் கொண்டது...
சிலவற்றைப் பகிர்ந்து
கொள்ளவும் தோன்றியது...
நெஞ்சிருக்கும் வரை
நினைவில் இருக்கும்...
எம் முத்தான நட்பிற்கு வயது
முப்பத்தேழு வருடங்கள்.. அது
என் வயதின் மூன்றில்
இரு பங்கிற்குச் சமம்...
ஆயிரமாயிரம் பொற்காசுகள்
இதற்கில்லை சமம்...
சென்னையின் பெரும்பகுதி
ஜெமோவுடன் பயணித்த
யமாஹாவில் சுற்றியதில்
தெரிந்து கொண்டேன்...
நட்பு மிக இனிமையானது...
எதனையும் சுற்றாமலேயே
தெரிந்து கொண்டேன்...
வாட்ஸ்அப்பால் தொடர்பில்
உள்ளவர்கள் பலர்...
வாட்ஸ்அப் காலத்திற்கு
முன்பும் எப்போதும் தொடர்பில்
இர
வானும் மேகமும்
கொடுத்த கடன்..!!!
நிலமும் நீரும்
கொடுத்த கடன்..!!!
கடலும் கரையும்
கொடுத்த கடன்...!!!
நீயும்
உன்
நிழலும்
எனக்காக
கொடுத்த கடன்...!!!
என்ன அந்த கடன்?
எதற்கு அந்த கடன்?
யாரிடம் வாங்கிய கடன்?
யாருக்கு கொடுத்த கடன்?
காதலுக்காக கொடுத்த கடனோ..!!!
இல்லை இல்லை
உன்னுடனான
என்
நட்பிற்கான கடன்...!!!
யாரிடமும் வாங்கக்கூடிய
கடன்.
யாருக்கும் கொடுக்கக்கூடிய
கடன்..
அது
நட்பு மட்டும் தான் அன்றோ!!!!
புகைப்படத்தில்
அவள் முகம்...
பெண் பார்க்கப்
போக வேண்டும் என்பதால்
இரவு சற்று
நீண்டு தான் போனது...
சூரியன் தென்பட்டான்
ஒரு வழியாக...
என்றும் இல்லாமல்
இன்று சற்று
மெருகேறியது போல்
கண்ணாடியில் என் முகம்...
பெண் வீட்டிற்கு வந்ததும்
அவர்களே ஒரு வாய்ப்பு
தந்தனர்
இருவரும் பேச...
இரவில் பார்த்ததை விட
நேரில் இன்னும்
அழகாய் இருந்தாள்...
அருகில் அவள்...
நான் ரசித்த
தமிழ் கவிதைகள் எல்லாம்
ஒன்று கூடின...
ஆனால் எல்லா கவிக்கும்
கவிஞன் நான் என்பதாய்...
அந்த நொடிகள்
வாழ்வின் இனிமையான
தருணங்கள்...
இனிதே தொடங்கினோம்
புது கவிதையை...
நீ என்னைப்
பின் தொடர்வதால்
பயணிக் கின்றேன்..
பயமில்லாமல்...
- காதல் சொல்ல தவிப்பவன்
கைகோர்த்து நடந்தால்
பயணிப்பேன்
பயமே இன்றி
ஆனந்தமாய்...- சொல்லிவிடு காதலை
ஒரு பெண்
ரோஜா இதழைப் போன்ற
அழகைக் கொண்டவள்
என்றாலும்
சுய கட்டுப்பாடு என்னும்
முட்கள் தான்
அவள் அழகுக்கு
பெருமை சேர்க்கும்...
நடனம் புரியும்
நங்கை அல்ல...
உன்னை சந்திக்கும்
அந்த நொடி...
கால்கள் தரை
நிற்பதில்லை...
கைகள் தானாய்
பதறுகிறது...
கண்கள் ஏனோ
உருண்டு மருள்கிறது...
இதழ்களில் ஏதோ
ஒரு பாடல்...
மொத்தத்தில்
நான் நானாய் இல்லை
என் செய்வேன்?
என்னைத் தூண்டி
வேடிக்கைப் பார்க்கும்
என் இதயத்தை...
கை ஏந்தி
யாசகம் கேட்டிடவும்
வேண்டும்!
ஒரு மன தைரியம்...
எத்தனை வேதனை
எத்தனை யோசனை
எத்தனை குழப்பங்கள்
எத்தனை கண்ணீர்
இந்த முடிவு எட்டுவதற்கு...
காற்று அடித்தால் கலைந்து போக- இது
ஒன்றும் மேகம் அல்ல
காரணம் இல்லாமல் மறைந்து போக- இது
ஒன்றும் கனவும் அல்ல- அருகில்
சென்று பார்த்தால் காணாமல் போகும்
கானால் நீர் அல்ல - நம் உயிர்
கல்லறை செல்லும் வரை தொடரும்-
உண்மையான நட்பு.