என் அருகில் அவள்

புகைப்படத்தில்
அவள் முகம்...
பெண் பார்க்கப்
போக வேண்டும் என்பதால்
இரவு சற்று
நீண்டு தான் போனது...
சூரியன் தென்பட்டான்
ஒரு வழியாக...
என்றும் இல்லாமல்
இன்று சற்று
மெருகேறியது போல்
கண்ணாடியில் என் முகம்...
பெண் வீட்டிற்கு வந்ததும்
அவர்களே ஒரு வாய்ப்பு
தந்தனர்
இருவரும் பேச...
இரவில் பார்த்ததை விட
நேரில் இன்னும்
அழகாய் இருந்தாள்...
அருகில் அவள்...
நான் ரசித்த
தமிழ் கவிதைகள் எல்லாம்
ஒன்று கூடின...
ஆனால் எல்லா கவிக்கும்
கவிஞன் நான் என்பதாய்...
அந்த நொடிகள்
வாழ்வின் இனிமையான
தருணங்கள்...
இனிதே தொடங்கினோம்
புது கவிதையை...