அவள் விழிகளில் வழியும் கண்ணீர்

ஒரு துளி மழை நீர்
இதயத்தைப்
பூரிக்க செய்யும்...

அதே ஒரு துளி நீர் தான்...

சிறிது உப்பு கலந்து
வரும்போது

என் இதயம்
துண்டு துண்டாய்
உடைந்த வலியைத் தரும்...

அது அவள் விழிகளில்
வழியும் கண்ணீர்...

எழுதியவர் : கீர்த்தி (2-Jul-20, 8:20 pm)
பார்வை : 254

மேலே