என் செய்வேன் என் இதயத்தை
நடனம் புரியும்
நங்கை அல்ல...
உன்னை சந்திக்கும்
அந்த நொடி...
கால்கள் தரை
நிற்பதில்லை...
கைகள் தானாய்
பதறுகிறது...
கண்கள் ஏனோ
உருண்டு மருள்கிறது...
இதழ்களில் ஏதோ
ஒரு பாடல்...
மொத்தத்தில்
நான் நானாய் இல்லை
என் செய்வேன்?
என்னைத் தூண்டி
வேடிக்கைப் பார்க்கும்
என் இதயத்தை...