விஜயகுமார் நாட்ராயன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விஜயகுமார் நாட்ராயன் |
இடம் | : PALANI |
பிறந்த தேதி | : 15-Aug-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 1689 |
புள்ளி | : 77 |
எல்லோரும் தூண்ட எரியும் விளக்கு
துயரத்திலிருந்து விடுபட்டு
உயரப் பறந்துவிட்டாய் நீ - அந்தத்
துன்பக்கூண்டுக்குள் அடைபட்டு
நிர்கதியாய் நிற்கிறோம் நாங்கள்
தம்பி என்று வாஞ்சையுடன்
நீ கூப்பிடும் அந்தக் குரல் - இனி
கேட்கபோவதில்லையெனினும்
தம்பி என்று யாரழைத்தாலும்
நீயென நினைத்தே திரும்பிடுவேன்
பூங்காற்று வந்து - என்
தலைகோதும்போதெல்லாம்
காப்பு காய்ச்சிய, கருத்த
உன் கைவிரல்களே
என் நினைவுக்கு வந்திடும்
மரணம் என்பது
சாபமா? விடுதலையா?
எனத் தெரியவில்லை - ஆனால்
உன் மரணம்
உனக்கு விடுதலை
எங்களுக்கு சாபம்
எல்லா மரணத்திற்கும்
எல்லோரும் அழுவதில்லை
எந்த உயிர் - நம்மை
சிரிக்க வைத்ததோ
அந்த
காபியே என் ஹாபியே -என்
காலையின் துவக்கமும் நீயே
மாலையின் மயக்கமும் நீயே
உன்னைப் அருந்தும்போது
உதடுகள் சூடாகின்றது
உள்ளமோ குளிர்கின்றது
இதழ்கள் கசக்கின்றது
இதயமோ இனிக்கின்றது
ஆவி பறக்கும்போதே
ஆவல் பிறக்கின்றது
காபி கோப்பையில் சர்க்கரையைக்
கரைக்கும்போதே - அந்த
அமுதக்கடலில் நானும் நீந்தி
அக்கரையைக் கடக்கின்றேன்
பருகும்போதெல்லாம்
பழைய காதலியைப் பார்த்த
பரவசமும், புத்துணர்ச்சியும்
இலவசமாய் இணைகிறது
உன்னை அருந்தவே
எழுந்து வருகிறேன்
உன்னை அருந்தியே
உறங்கச் செல்கிறேன்
ஞானம் பிறக்க
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கணம்
புத்தனுக்கு போதிமரம் - இந்
இந்நாட்டின் சிறந்தவர்
ஈரோட்டில் பிறந்தவர்
கருப்புச்சட்டை அணிந்தவர்
கருத்துசொல்லத் துணிந்தவர்
கைத்தறியைச் சுற்றியவர்
கைத்தடியைப் பற்றியவர்
மனுதர்மத்தை மிதித்தவர்
மனதர்மத்தை மதித்தவர்
கேள்விகளைக் கொடுத்தவர்
வேள்விகளைத் தடுத்தவர்
மேதமை உடை தரித்தவர்
பேதமைகளை எரித்தவர்
சனாதனத்தை சிதைத்தவர்
சமாதானத்தை விதைத்தவர்
பாமரனுக்காக உழைத்தவர்
பகுத்தறிவில் திளைத்தவர்
சாதிக்கொடுமையைத் தீத்தவர்
சாமானியனைக் காத்தவர்
ஆரியவாதியை அழித்தவர்
காரியவாதியை ஒழித்தவர்
மூத்திரச்சட்டியைத் தாங்கியவர்
சூத்திர விடுதலைக்கு ஏங்கியவர்
தந்திரத்தால் சூடுபட்டவர்
நாங்கள் எப்போதும்
மௌனமாகவே இருக்கின்றோம்
எங்களுக்கு வயதாகிவிட்டது
பிரியமுடன் பேசுவதற்குப்
பிள்ளைகளுக்கு நேரமில்லை
அனுபவங்களை பேசித்தீர்க்க
அருமை நட்புகள் அருகிலில்லை
உரிமையோடு சண்டையிட
உறவுகளும் வருவதில்லை
நீதிக்கதைகளை நெகிழ்ந்து கேட்க
பேரன், பேத்திகளுக்கு பொறுமையில்லை
அலைபேசி மட்டும் இருக்கிறது
அழைப்புகள் எதுவுமில்லை
தொலைக்காட்சியுண்டு - அதற்கு
வாய்மட்டும் உண்டு காதுகளில்லை
கூண்டுகளில் கதவிற்குள்
கிளிகளுக்கு சுதந்திரமில்லை
வயோதிகத்தின் விளிம்புகளில்
வார்த்தைகளுக்கு விடுதலையில்லை
ஏங்கித்தவிக்கும் எங்களுக்கு
பேசுவதற்கு சங்கதியில்லாமலில்லை
கேட்பதற்குத்தான்
உன் தன்னம்பிக்கை பேச்சுகள் பிடிக்கும் ....
உன் தலையணையாய் நான் இருந்திட பிடிக்கும்....
உன் கர்வம் கூட ரொம்ப பிடிக்கும்.....
உன் கவிதைகளாய் நான் வாழ்ந்திட பிடிக்கும்.....
நீ திமிராய் பார்க்கும் பார்வை பிடிக்கும்....
உன்னை திட்ட சொல்லி கெஞ்சிட பிடிக்கும்....
உன் வார்த்தையில் விழுந்து மூழ்கிட பிடிக்கும்.....
அதன் வாசலில் தவழ்ந்து எழுந்திட பிடிக்கும்.....
உன்னை மட்டும் பார்த்திட பிடிக்கும்.....
உறங்கும் போதும் உன் பெயர் உளறிட பிடிக்கும்....
நீ இருக்கும் போது வாழ்ந்திட பிடிக்கும்....
நீ இல்லாத நேரம் தான் மரணமும் பிடிக்கும்.....
உன்னை அம்மா என்று அழைத்திட பிடிக்கும்.....
உன் ஆறுதலில்
நெருங்க முடியாத
தூரத்தில்
நீ......
உன்னை நெருங்க கூடாத
தூரத்தில்
நான்.....
இன்னொரு தாயின்
குழந்தையாக நீ.....
இன்னொரு முறை
உன்னை பெற்றுக்கொள்ள
முடியாமல் நான் .....
விலங்குகளின் உரவு எதுவெனக் கேட்டேன்
கானகம் தானென களித்து சொன்னது!
கானகத்தின் உரவு எதுவெனக் கவனித்துக் கேட்டேன்
மண்ணைத்தொட்ட மழைத்துளியென மகிழ்ந்து சொன்னது! மழைத்துத்துளியின் உரவைக் கேட்டேன்
கருமேகந்தானென கனிவாய் சொன்னது! கருமேகத்தின் கதையைக் கேட்டேன்
குளிர் காற்றோடு உறவாடல் என்றது!
காற்றின் உரவை கவனித்துக் கேட்டேன்
மாசில்லா மண்தானென மறுமொழி சொன்னது!
இயற்கையின் உரவு எதுவெனக் கேட்டேன் ஒற்றுமை தானென உரக்கச் சொன்னது!
தொடு வனம்.....
அந்தி மேகம்.....
அடர் பனி......
அழகான ரோஜா .......
ராத்திரி ராகம் ......
இலக்கிய கவிதை......
முற்றத்து நிலவு......
முகம் மறக்கும் கதிர் ........
இவற்றோடு
உன் இதழோரப்புன்னகை ......
தாமஸ் எடிசன்
ரைட் சகோதரர்கள்
பெஞ்சமின் பிராங்க்ளின்
சார்லஸ் பாபேஜ்
அலெக்சாண்டர் பெல்
கலிலியோ
ஐன்ஸடீன்
அப்துல் கலாம்
நீங்கள் அனைவரும்
மீண்டும் பிறந்து வாருங்கள்
மானுடம் உண்பதற்கு
தொழில்நுடப உதவியால்
இரும்பு சாதனங்களைக் கொண்டு
எதையாவது கண்டறிந்து
தாருங்கள் - காரணம்
இனி எங்கள் நாட்டில்
வெள்ளாமை இருக்காது - ஏனினில்
வேளாண்மையே இருக்காது.
இந்த உலகில்
வேளாண்மை இருந்தவரை
வேலையின்மை இருந்ததில்லை - ஆனால்
இங்கே உள்ளவர்கள்
விவசாய நிலங்களின் மீது
கட்டிடங்களையும்
விவசாயிகளின் மீது
சமாதிகளையும்
எழுப்பிவிட்டார்கள்
குளங்களை மூடிவிட்டார்கள்
நிலங்களை மாற்றிவி