பிடிக்கும்

உன் தன்னம்பிக்கை பேச்சுகள் பிடிக்கும் ....
உன் தலையணையாய் நான் இருந்திட பிடிக்கும்....
உன் கர்வம் கூட ரொம்ப பிடிக்கும்.....
உன் கவிதைகளாய் நான் வாழ்ந்திட பிடிக்கும்.....
நீ திமிராய் பார்க்கும் பார்வை பிடிக்கும்....
உன்னை திட்ட சொல்லி கெஞ்சிட பிடிக்கும்....
உன் வார்த்தையில் விழுந்து மூழ்கிட பிடிக்கும்.....
அதன் வாசலில் தவழ்ந்து எழுந்திட பிடிக்கும்.....
உன்னை மட்டும் பார்த்திட பிடிக்கும்.....
உறங்கும் போதும் உன் பெயர் உளறிட பிடிக்கும்....
நீ இருக்கும் போது வாழ்ந்திட பிடிக்கும்....
நீ இல்லாத நேரம் தான் மரணமும் பிடிக்கும்.....
உன்னை அம்மா என்று அழைத்திட பிடிக்கும்.....
உன் ஆறுதலில் தான் அகிலமும் பிடிக்கும்......

எழுதியவர் : pavi (22-Jun-12, 10:12 am)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : pidikum
பார்வை : 220

மேலே