பத்ம பிரியா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பத்ம பிரியா
இடம்
பிறந்த தேதி :  29-Sep-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2011
பார்த்தவர்கள்:  282
புள்ளி:  82

என்னைப் பற்றி...

முட்புதரில் தன்னை தேடும் துளசி செடி

என் படைப்புகள்
பத்ம பிரியா செய்திகள்
பத்ம பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2021 5:53 pm

முதல் தொடுதல் அழகு
முதல் முத்தம் பேரழகு
என்னையே நான் அறியாத்தருணத்தில்
உன் முதல் முத்தம் பெற்றேன்
முதல் முத்தமிடுகையில் என்னென்ன நினைத்தாயோ?
அள்ளி அணைக்கையில்
துள்ளிக் குதித்தாயோ?
உன் உதிரத்தின் உணர்வெல்லாம் உயிர் பெற்றதாய் உள்ளம் களித்தாயோ?
உன் உடல் கண்ட வேதனைகளெல்லாம் எனைக்கண்டதும்
முழூவதும் மறந்தாயோ?
நிலவு காட்டி சோறூட்டிய நாள் தொடங்கி உன் நினைவுகள்
முடியும் வரையிலும் என்னை மட்டுமே நெஞ்சில் தூக்கி
சுமப்பவள் நீ
பள்ளிப்பாடம் தொடங்கி
பல நூறு கற்றுக்கொண்டேன் உன்னிடம்
பள்ளிக்கதை முழுதும்
பேசித்தீர்த்த காலம்
தொடங்கி நொடி தோறும்
உன் புடவை தலைப்புத்தான்
என் உரிமைக்கொடி
காலங்கள் கடந்தோட

மேலும்

பத்ம பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2021 11:36 pm

கர்பப்பை
ஒன்றென்று யார் சொன்னது
உன்னை அள்ளி அணைக்கையிலே
நீ அடிவயிறு தீண்டயிலே
என் ஆதி அந்தமும்
அற்புதமாய் தோனுதடி
வித்தாய் நீ விழுந்த இடம்
ஒரு நூறாய்
உடல் முழுக்க பரவி
உன்னை சுமந்திடத்தான் ஏங்குதடி
என் அணுக்களின்
அசைவெல்லாம் உன்னை அற்புதமாய் உணருதடி
உனை ஏந்தும் வேளையிலே
என் ஆன்மாவும் சிலிர்க்குதடி
என் முந்நூறு நாள் தவமே
எனக்கு வாழ்வு தந்த வரமே

மேலும்

பத்ம பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2021 9:19 pm

புல்லாங்குழல்
துளை செல்லும் காற்று
தன்னிலை மறந்து
தான் தேடுதல் போல
சுத்தமான காற்றையெல்லாம்
தூரதேசம் அனுப்பிவிட்டு
மாசுக்களுடன் தானே
மணவாழ்க்கை செய்கிறோம்!
ஆக்ஜிசன் பற்றவில்லையென அரைக்கூவல் விடுகின்றோம்
மரங்களெல்லாம்
மண்ணில் வீழ்கையில்
மனசாட்சியை எங்கே
மறைத்து வைத்தோம்?
காட்டையெல்லாம் கச்சிதமாய்
திட்டமிட்டு அழித்துவிட்டு
கரியமில வாயுவையா?
சுவாசிக்கப் போகின்றோம்
குடிநீரை ஏற்கனவே
குத்தகைக்கு விட்டுவிட்டோம்
இன்று காற்றிற்காய்
யாரிடமோ கையேந்தி நிற்கிறோம்
ஆடம்பரம் என்ற பேரில்
சாலைகள் போட்டோம்
சாலைகளை சீர் செய்ய
மரங்களைச்சாய்த்தோம்
மரங்கள் விட்ட கண்ணீரின் வ

மேலும்

பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2013 4:27 pm

தொடு வனம்.....
அந்தி மேகம்.....
அடர் பனி......
அழகான ரோஜா .......
ராத்திரி ராகம் ......
இலக்கிய கவிதை......
முற்றத்து நிலவு......
முகம் மறக்கும் கதிர் ........
இவற்றோடு
உன் இதழோரப்புன்னகை ......

மேலும்

நன்றி 01-May-2021 9:16 pm
மேற்கண்ட அனைத்தையும் விட இந்தக் கவிதை அழகு 30-Apr-2021 9:50 pm
பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 4:29 pm

முன் பின் தெரியாமல் இணைந்தோம்
முகவரி சொல்லாமல் பிரிந்தோம்
பேருந்து ஜன்னல் ஒர இருக்கையில்
ஒட்டி கொண்டு நீ.
உன்னை முறைத்து கொண்டு நான்
நான் அமரப்போன இருக்கையில்
அவசரமாய் அமர்ந்து கொண்டாயே
நேரங்கள் பேருந்தை விட வேகமாக சென்றது
நீ யாரிடமோ பேசினாய்
அதில் எத்தனை வார்த்தை எனக்கு சொந்தம் தெரியுமா? ரசனை பலவற்றில் என்னை போலே நீ. உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை
ஆனாலும்
ஆண்டுகள் பல கடந்த பின்னும் எந்த பேருந்தில் ஜன்னல் ஓரம் கண்டாலும் உன் நினைவு தான்

மேலும்

நன்றி 01-May-2021 9:05 pm
இனி பேருந்தில் ஜன்னல் ஓரம் கிடைத்தால் இந்தக் கவிதையே என் நினைவில் நிற்கும் 30-Apr-2021 9:47 pm
பத்ம பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2021 11:58 am

அழகிய உறவே
அதிசய உணர்வே
அமைதியின் அர்த்தங்கள் நீ தான்!
பகல் நேர நிலவே
இரவின் கதிரே
இயற்கையின் ரசனை
நீ தான்!
தொட்டுச்செல்லும் தென்றல்
தொடர்கின்ற வானம்
தொலைதூரப்புன்னகை
நீ தான்!
சுழலும் பூமி
சுடர்விடும் ஒளியே
என் சுதந்திரக் காற்றும்
நீ தான்!
கருவறை வெளிச்சம்
கலைகளின் வடிவம்
என் கனவுகளின் மொத்தமும்
நீ தான்!
தனிமையைத் தகர்த்தவள்
தவிப்புகள் தீர்த்தவள்
தாய்மையின் அர்த்தமும் நீ தான்!
உதிரத்தின் உணர்வே
உணர்வின் உன்னதமே
உள்ளத்து களிப்பும்
நீ தான்!
வாடா வசந்தமே
வார்த்தையின் ஒலியே
எனை வாழ வைப்பவள்
நீ தான் !
மகள் என்னும் தாயே
மகிழ்ச்சியின் உருவே
என் வாழ்வின் முழுமைய

மேலும்

பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2021 9:24 pm

விலங்குகளின் உரவு எதுவெனக் கேட்டேன்
கானகம் தானென களித்து சொன்னது!
கானகத்தின் உரவு எதுவெனக் கவனித்துக் கேட்டேன்
மண்ணைத்தொட்ட மழைத்துளியென மகிழ்ந்து சொன்னது! மழைத்துத்துளியின் உரவைக் கேட்டேன்
கருமேகந்தானென கனிவாய் சொன்னது! கருமேகத்தின் கதையைக் கேட்டேன்
குளிர் காற்றோடு உறவாடல் என்றது!
காற்றின் உரவை கவனித்துக் கேட்டேன்
மாசில்லா மண்தானென மறுமொழி சொன்னது!
இயற்கையின் உரவு எதுவெனக் கேட்டேன் ஒற்றுமை தானென உரக்கச் சொன்னது!

மேலும்

கண்ணதாசன் நடை போல அருமை 30-Apr-2021 9:53 pm
பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2012 10:03 am

"நட்புக்குள்ளும் ஒரு காதல் "
இது நாகரிகமானது
காமத்திற்கு அப்பாற்பட்டது.....
கண்ணீர் தருணங்களில் மட்டும்
கட்டித்தழுவி கொள்வது .....
சுயமாய் சிந்திக்க
சுமையாய் இல்லாதது........
நீயின்றி நானில்லை.....
நானின்றி நீயில்லை......
என்னும் கற்பனை
பொய்யிற்கு அப்பாற்பட்டது ......
பிரிவு என்ற எதார்த்தத்தை
பிரியமுடன் ஏற்கும் பக்குவப்பட்டது....
பல வருடம் கழிந்து பார்க்கினும்
பழைய நினைவுகளின் பாதத்தை
சட்டென பற்றிக்கொள்வது.......
சேர முடியாமல் போகும் போதும்
அதன் நினைவை

மேலும்

பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2017 4:43 pm

கற்பனையில் உனக்கொரு
உருவம் கொடுத்து பாா்க்கின்றேன்
உருகி உருகி உனக்காக
உதிரம் வெளுத்து சாகின்றேன்
இல்லாத உன் நிஜமோ
என் நெஞ்சை வதைக்கிறது
ஏங்கி ஏங்கி என் நிழலும்
எனக்குள்ளே கரைகிறது
ஈரக்காற்று பட்டாலும்
என் மேனி எாிகிறது
ஏகாந்த இரவும்
எனை ஏனோ சுடுகிறது
போதுமென்று உன் நினைவைத்
துாக்கிப்போட முடியவில்லை
பொத்திவைத்த ஆசைகளோ
எனைத்துாங்க விடுவதில்லை
பருவம் வந்த நாள் முதலாய்
சோ்த்து வைத்த உன்நினைவு
பாதியிலே போய்விடுமோ
பாவை நான் உனை காணும் முன்னே.

மேலும்

அற்புதம் 30-Apr-2021 9:46 pm
நன்றி யுவராஜ் 03-Aug-2017 12:30 pm
நல்ல படைப்பு 02-Aug-2017 9:39 pm
பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2017 4:43 pm

கற்பனையில் உனக்கொரு
உருவம் கொடுத்து பாா்க்கின்றேன்
உருகி உருகி உனக்காக
உதிரம் வெளுத்து சாகின்றேன்
இல்லாத உன் நிஜமோ
என் நெஞ்சை வதைக்கிறது
ஏங்கி ஏங்கி என் நிழலும்
எனக்குள்ளே கரைகிறது
ஈரக்காற்று பட்டாலும்
என் மேனி எாிகிறது
ஏகாந்த இரவும்
எனை ஏனோ சுடுகிறது
போதுமென்று உன் நினைவைத்
துாக்கிப்போட முடியவில்லை
பொத்திவைத்த ஆசைகளோ
எனைத்துாங்க விடுவதில்லை
பருவம் வந்த நாள் முதலாய்
சோ்த்து வைத்த உன்நினைவு
பாதியிலே போய்விடுமோ
பாவை நான் உனை காணும் முன்னே.

மேலும்

அற்புதம் 30-Apr-2021 9:46 pm
நன்றி யுவராஜ் 03-Aug-2017 12:30 pm
நல்ல படைப்பு 02-Aug-2017 9:39 pm
பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2013 1:49 pm

முதன்முதல் உன்னை பார்த்த நொடிகளை அழிக்காமல் அசைபோடுகிறது மனது ....
உன் குரல்கள் பட்டு எதிரொலிக்க
தவம் கிடக்கிறது செவிகள் ....
நீ பார்க்கும் நொடிக்காக எப்போதும்
தயார் நிலையில் விழிகள் ......
விட்டு போன உனக்காய்
என்னிடம் விட்டுக்கொடுக்காத நான்
.....

மேலும்

இது காதலுக்கான கவிதையல்ல 13-Jun-2013 4:54 pm
எல்லாம் காதல் படுத்தும்போடு சரி .....வாழ்த்துக்கள் 07-Jun-2013 7:10 pm
பத்ம பிரியா - பத்ம பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 4:18 pm

அதிகம் பேசக் கூடாதம் நாம்
அதனால் தான்
நம்மை பற்றி பலர் பேசுகிறார்கள்.....
அன்று துரியோதனன் அவையில்
களையப்பட்டது பாஞ்சாலி துயில் மட்டுமல்ல அவள் தன்மானமும் தான்
இதிகாசம் தொடக்கி இன்டர்நெட் வரை
பெண்களை ஒன்று அவமானம் இல்லை ஆபசதிற்குதான் பயன்படுத்துகிறார்கள்.
என்று மாறும் இந்த நிலை......

மேலும்

இது போன்ற கவிதை ஈட்டிகள் பாய்ந்தால் அந்த நிலை மாறலாம் 30-Apr-2021 9:49 pm
தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே 22-Feb-2014 5:17 pm
எடுத்துக்கொண்ட மையக்கரு வலிமை.. இன்னும் ஆழமாக சிந்தித்து எழுத வாழ்த்துக்கள் 22-Feb-2014 5:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே