உரவு வலிமை

விலங்குகளின் உரவு எதுவெனக் கேட்டேன்
கானகம் தானென களித்து சொன்னது!
கானகத்தின் உரவு எதுவெனக் கவனித்துக் கேட்டேன்
மண்ணைத்தொட்ட மழைத்துளியென மகிழ்ந்து சொன்னது!
மழைத்துத்துளியின் உரவைக் கேட்டேன்
கருமேகந்தானென கனிவாய் சொன்னது!
கருமேகத்தின் கதையைக் கேட்டேன்
குளிர் காற்றோடு உறவாடல் என்றது!
காற்றின் உரவை கவனித்துக் கேட்டேன்
மாசில்லா மண்தானென மறுமொழி சொன்னது!
இயற்கையின் உரவு எதுவெனக் கேட்டேன் ஒற்றுமை தானென உரக்கச் சொன்னது!

எழுதியவர் : பத்மபிரியா (24-Apr-21, 9:24 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 117

மேலே