பரிசல் பயணம்

கூடைக்குள் குதூகலமாய்
ஒரு பயணம் .....
ஓடை தாண்டுவதற்கு
ஓய்யாரமாய் ஒரு பயணம் ....

தாய்ச்சேலை தொட்டிலுக்குள்
தாலாட்டுடன் ஒரு பயணம் .....
வளைந்த மூங்கில்கட்டிலதில்
முத்தாய்ப்பாய் ஒரு பயணம் ......

ஆழங்கொண்ட ஆற்றினிலே
ஆர்வத்துடன் ஒரு பயணம் ......
புரண்டோடும் நதியினிலே
பூரிப்பாய் ஒரு பயணம் .......

அப்பாவை இறுக்ககட்டி சென்ற
அந்தநாளதின் ஆனந்தபயணம் ......
தாத்தன்கள் விட்டுச்சென்ற
கூட்டதற்குள் தவமாயோர் அதிசயப்பயணம் .....

சோகங்கொண்ட நெஞ்சதனை
இதமாய் வருடிவிடும் இந்த பயணம் .....
முன்னோன் வாழ்வில் இணைந்து
முடிவு கண்ட காலப்பயணம் ......

எழுதியவர் : என்.கே.ராஜ் (24-Apr-21, 9:01 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 181

மேலே