விடை தெரியாத கேள்வி
மொட்டை மாடி தனிமையில் உணர்வுகளின் நிசப்தத்தில் குளிர் காற்று உடல் தொடுகையில் காலப் பெருவெளியில் ஆண்டுகள் பல கடந்து பின்னோக்கிப் போகிறேன் அன்றெல்லாம் நினைத்தவுடன் தோன்றிய கவிதைகள் எல்லாம் இன்று நிசப்தமானது எதனால்?
அன்றைய வார்த்தைகளின் ஜாலங்கள் எல்லாம் இன்று வறண்டு கரைந்து போனது எங்கே?
விடைகளைத் தேடி முடித்திடும் முன்னே அம்மா வா
என்ற மகளின் குரலில் நிகழ்காலத்திற்கு ஓடிவந்து மெல்ல நகர்கிறேன்
இப்போது மொட்டை மாடியில் தனிமையில் இன்னும் நான் எழுதி முடிக்காத கவிதைகளும்
என் விடை தெரியாத கேள்விகளும் மட்டும்