நாமறியோம் நிச்சயம்

இல்லத்தின் இளவரசி
இன்முகம் முப்போதும் !
திரும்பிப் பார்க்கிறார்
திருவளர்ச் செல்வியவர் !

வியந்து நோக்குகிறார்
வினோத உலகையவர் !
கவிழ்ந்துப் படுத்திருந்த
காலத்தைக் கடந்ததும்
அமர்பவர் நடப்பவர் !


அகன்ற விழிகளுடன்
ஆழ்ந்த யோனையுடன்
நிமிர்ந்த பார்வையுடன்
அகிலத்து நிகழ்வுகளை
அலசும் நிலையிதுவோ !
மழலை மொழியிலே
கூறிடவும் துடிக்கிறார் !


இதுதானா இவ்வுலகம்
மாறாதா இம்மண்ணும்
மறையாதா சாதிமதமும்
மலர்ந்திடாதா மனிதமும்
என்றே நினைப்பாரோ !
யாரறிவார் எண்ணத்தை
நாமறியோம் நிச்சயம் !!!


பழனி குமார்
13.04.2023

எழுதியவர் : பழனி குமார் (13-Apr-23, 10:10 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1422

மேலே