நட்புக்குள்ளும் ஒரு காதல்

"நட்புக்குள்ளும் ஒரு காதல் "
இது நாகரிகமானது
காமத்திற்கு அப்பாற்பட்டது.....
கண்ணீர் தருணங்களில் மட்டும்
கட்டித்தழுவி கொள்வது .....
சுயமாய் சிந்திக்க
சுமையாய் இல்லாதது........
நீயின்றி நானில்லை.....
நானின்றி நீயில்லை......
என்னும் கற்பனை
பொய்யிற்கு அப்பாற்பட்டது ......
பிரிவு என்ற எதார்த்தத்தை
பிரியமுடன் ஏற்கும் பக்குவப்பட்டது....
பல வருடம் கழிந்து பார்க்கினும்
பழைய நினைவுகளின் பாதத்தை
சட்டென பற்றிக்கொள்வது.......
சேர முடியாமல் போகும் போதும்
அதன் நினைவை மட்டும் தினம்
சுவா சித்துக்கொள்வது.......
இந்த கவிதை படிக்கும்
தருணத்திலும் நட்பின்
ஏகாந்தத்தை நினைத்துக்கொள்வது......

எழுதியவர் : pavi (30-Jun-12, 10:03 am)
பார்வை : 191

மேலே