!!! இன்றே கடைசி நாள் (கவிதை திருவிழா) !!!
எழுத்து.காம் தோழமைகளே....
கவிதை திருவிழா குழு கேட்டுகொண்டதைபோல் கவிதைகளால் உழவனையும் புரட்சியாளனையும் சிறப்பித்தீர்கள், சிறப்பித்துகொண்டும் இருக்கிறீர்கள், நீங்கள் சிறப்பித்த நூற்றுக்கும் மேலான கவிதைகள் அனைத்தும் நடுவர்களின் மேற்பார்வையில் இருந்துகொண்டு இருக்கிறது, தேர்வாகும் சிறந்த கவிதைகளுக்கு திருவிழாகுழுவால் அன்பு காணிக்கை வழங்கப்படவும் உள்ளது,
தோழமைகளே...
கவிதை திருவிழாவிற்கு கவிதை எழுத இன்றே கடைசிநாள், இந்திய நேரப்படி இன்று மாலை ஆறு மணிக்குள் தாங்களின் கவிதை திருவிழாவிற்கான கவிதைகளை சமர்ப்பிக்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆறுமணிக்கு மேல் பதிவு செய்யப்படும் கவிதைகளை கவிதை திருவிழா குழு தாங்கள் மேற்பார்வைக்கு எடுத்துகொள்ளாது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இன்று ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கிறது விரைவாக எழுதுங்கள் தோழமைகளே... (அடுத்த மாதம் நான்காம் தேதி (04.07.2012) சிறந்த கவிதைகளின் முடிவுகள் கவிதை திருவிழா குழுவால் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்).
மீண்டும் தாங்களின் மேற்பார்வைக்கு கவிதைகள் எழுதவேண்டிய தலைப்புகள்...
1 . தேவை ஒரு விவசாய புரட்சி (கவிதை திருவிழா)
2 . இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் (கவிதை திருவிழா)
3 . சே குவேரா ஒரு மாமனிதன் (கவிதை திருவிழா)
4 . சமூக அவலங்கள் (கவிதை திருவிழா)
5 . ஒப்பில்லா உழவு (கவிதை திருவிழா)
* கவிதைகள் 25 அல்லது 30 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதவும்.
* மேலும் விபரங்களை தெளிவாக தெரிந்துகொள்ள கவிதை திருவிழா குழுவின் முதல் அறிக்கை அறிவிப்பை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்...
என்றும் உங்கள் தோழமைக்காய்...
நிலாசூரியன்.