பிரிவு

இழந்தபின் தான்
உணருகின்றேன்
என் காதல்
நீ என்று

மழைக்கால காவிரியாய்
என் எதிரே
நீயிருக்க
கற்பனையில் சஞ்சரித்தே
கானலையே
தேடி நின்றேன்

அள்ளி அள்ளி
தந்தாய் நீ
அறியா பிள்ளையாய்
நான்
அலட்சியம் தான்
செய்திட்டேன்

அன்பதனை
உணர்த்தவில்லை
ஆறுதலாய்
நின்றதில்லை
அகங்காரம்
மட்டும் தான்
உன்னிடத்தில்
கொண்டிருந்தேன்

கண்ணிருந்தும் பார்த்ததில்லை
காதிருந்தும் கேட்டதில்லை
வாயிருந்தும் பேசவில்லை
மன்னிப்பை வேண்டுகின்றேன்
மண்டியிட்டு நான் இன்று

இழந்தபின் தான்
உணருகின்றேன்
என் காதல்
நீ என்று !

எழுதியவர் : அனலி (14-Feb-25, 7:35 pm)
சேர்த்தது : வெண்முகில்
Tanglish : pirivu
பார்வை : 29

மேலே