அனலி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அனலி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jan-2019
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  32

என் படைப்புகள்
அனலி செய்திகள்
அனலி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2019 4:15 am

ஒரு ராஜபுத்திரர் எப்படி இருப்பார்? ராஜபுத்திரர்களின் பொதுவான வரலாறு நாமறிந்ததே. அவர்கள் இந்திய சமூகத்தின் போர்வாட்களாக இருந்தனர். அக்பர் அவர்களை தன் அன்பால் அரவணைத்து தன் வீரர்களாக ஆக்கிக்கொண்டார். அதன் பின்னர் அவர்கள் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேறும்வரை பிரிட்டிஷ் ராஜ்ஜின் தூண்கலாக விளங்கிவந்தனர். மொகலாயர் காலத்தில் அவர்களுக்கு ஜமீன் பதவி கிடைத்தது.குறுநில மன்னர்கள் போல தங்கள் பகுதியை அவர்கள் அடக்கி ஆண்டனர். பிரிட்டிஷார் வெளியேரிய காலகட்டத்தில் மெல்லமெல்ல சிதைந்து அழிந்தனர்.

ராஜபுத்திரர்களின் வீரம் இந்திய வரலாற்றில் விதந்து ஓதப்பட்டது. ராஜபுத்திரர்களின் வீரம் மூலமே முதல் உலகப்போரை ப

மேலும்

தேடிப்பிடித்து படிக்கத் தூண்டும் ஆழமான விமர்சனம் நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. 22-Apr-2019 12:46 pm
அனலி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 9:44 am

காதலன் எனும்
போர்வையில்
வந்த கயவனை,
நட்பெனும்
நாடகம் பூண்ட
நயவஞ்சகனை,
"ஆண் "
என்று கூறி
சொல்லின் பொருளை
கேட்கும்
விலங்குகளிடம்
விளக்கம் தர
இயலாமல்
விழி பிதுங்கி
நிற்கின்றேன்
ஆறறிவு கொண்டிட்ட
மேன்மை தாங்கிய
மனிதனாகிய
நான் !

மேலும்

அனலி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2019 1:52 pm

சிந்தியுங்கள் சிறப்படைய அல்ல
வாழ்க்கையில் சீர்பெறவே
அரிதானது ஆபத்தானது எதுவென
அறிந்துக் கொள்ளவே சிந்தியுங்கள்
நமதானது எது நாடக்கூடாததெது என
நம்முள் தெளிவு பெற நன்றாய் சிந்தியுங்கள்
இலகுவானது எது இடரானது எது என அறிய
இயன்றவரை முழுதாக சிந்தியுங்கள்
சாராயம் எது இனிப்பு சாறு எது என
உண்ணு அறியாமல் பிரிக்க சிந்தியுங்கள்
அறிவு எது ஆர்ப்பரிக்கும் மனது எது என
அறிய அகப்புலனோடு அழகாக சிந்தியுங்கள்
ஆசையை உள்ளுக்குள் புதைத்து
அறியும் ஆவலை மெய் செவி வாயுக்கு வைத்தால்
மெய்யான மேன்மையை மெல்ல மெல்ல அறிவீர் நீவீர்.
-- - நன்னாடன்

மேலும்

அனலி அவர்களின் பார்வைக்கும் செம்மை கருத்திற்கும் நன்றிகள் பல பல . 04-Mar-2019 10:11 am
சிந்தனை தெளிக்கும் சொற்கள் 03-Mar-2019 11:18 pm
பார்வைக்கும் கருத்திடலுக்கும் நன்றிகள் பல பல திரு வாசன் அய்யா அவர்களே. 27-Feb-2019 5:57 pm
அபாரம் . அதிலும் இறுதி மூன்று வரிகள் . அருமை அருமை 27-Feb-2019 5:52 pm
அனலி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2019 10:11 pm

பயிற்சி அளிப்பதுவுமில்லை
பலமாக போதிப்பதுவுமில்லை
பம்மாத்தாய் பேசுவதுவுமில்லை
பகல் வேடம் தரிப்பதுவுமில்லை
பயம் எங்களுக்கு வந்ததுவுமில்லை
பாறை மரம் என பாகுபாடுமில்லை
எப்போதும் ஓரணியாய்
எங்களின் எண் மடங்கு இலக்காய்
தவிடு போலிருப்போம்
தாளாத வலி கொடுப்போம்
புற்றிலும் போதி மரத்திலும் வாசம்
ஒவ்வொரு நாளும் ஓய்வறியாமல்
உழைப்பு என்பதே மந்திரமாய்
-- - நன்னாடன்

மேலும்

அனலி அவர்களின் பார்வைக்கும் நிறைவான கருத்திற்கும் நன்றிகள் பல பல . 04-Mar-2019 10:09 am
Super super 03-Mar-2019 11:15 pm
சிறப்பாக கருத்தை சொன்னீர் அருமை அய்யா. உங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. வாசன் அய்யா. 01-Mar-2019 8:40 am
அருமை . புற்றிலும் சேற்றிலும் போதைப் பொருளிலும் போதி மரத்திலும் நாங்கள் சுறுசுறுப்பை கையாள்வோம் எனும் " எறும்பு ". அவர்களோடு ஒக்க நாம் ஒரு சிறு " துரும்பே " சரிதானே நன்னாடரே 01-Mar-2019 8:20 am
அனலி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2019 5:26 pm

வெள்ளையர்கள் கண்டுபிடிப்பில்
வெகுஜெனங்களை கவர்ந்த படைப்பு
வெவ்வேறு வழித்தடத்தில் வேளைக்கு ஒன்று என
வெள்ளோட்டம் விட்டு பார்த்தால் வெற்றிகளே

அசகாயசூரன் போலே அநாயசமாய் ஓடும் இது
அல்லல்களை குறைக்கக்கூடிய அவசிய வாகனம்
சகல வசதிகளையும் தன்னகத்தே பெற்றது
இயலாத பேருக்கெல்லாம் இனிதான போக்குவரத்து

குறைவாக துட்டிருப்பின் அதுவே அற்றிருப்பின்
நிறைவான பயணம் செய்து நினைத்தயிடம் சேரலாம்
ஓடலாம் ஆடலாம் ஓங்கி ஓங்கி குதிக்கலாம்
உறங்கலாம் உருளலாம் உடையை இங்கே மாற்றலாம்

கடைநிலை வாக்காளர் முதல் ஜனாதிபதி வரை
பயணிக்க பலவகை பெட்டிகள் பகுப்பாய் உண்டு
உணவும் உற்சாக பானமும் ஊடே உண்டு
ஒரு முறையேனும் பய

மேலும்

அனலி அவர்களின் பார்வைக்கும் சிறப்பு கருத்திற்கும் நன்றிகள் பல பல . 04-Mar-2019 10:08 am
இரயில் பயணம் இரசிக்கத்தக்கதே தங்கள் கூற்றுப்படி 03-Mar-2019 11:14 pm
தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் நிறைவான நன்றிகள் திரு வாசன் அய்யா. 01-Mar-2019 7:34 pm
உண்மை . மாறுதலான பதிவு நன்னாடரே 01-Mar-2019 6:53 pm
அனலி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2019 2:20 pm

இழந்தபின் தான்
உணருகின்றேன்
என் காதல்
நீ என்று

மழைக்கால காவிரியாய்
என் எதிரே
நீயிருக்க
கற்பனையில் சஞ்சரித்தே
கானலையே
தேடி நின்றேன்

அள்ளி அள்ளி
தந்தாய் நீ
அறியா பிள்ளையாய்
நான்
அலட்சியம் தான்
செய்திட்டேன்

அன்பதனை
உணர்த்தவில்லை
ஆறுதலாய்
நின்றதில்லை
அகங்காரம்
மட்டும் தான்
உன்னிடத்தில்
கொண்டிருந்தேன்

கண்ணிருந்தும் பார்த்ததில்லை
காதிருந்தும் கேட்டதில்லை
வாயிருந்தும் பேசவில்லை
மன்னிப்பை வேண்டுகின்றேன்
மண்டியிட்டு நான் இன்று

இழந்தபின் தான்
உணருகின்றேன்
என் காதல்
நீ என்று !

மேலும்

அனலி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2019 9:48 am

என்னால்
முடியாது
எனும் எண்ணத்தை
ஓட்டி விட்டால்
வாய்ப்பு
வழி
மறிக்கும்.....
வெற்றி
வாசல் வரும்.

மேலும்

அனலி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2019 9:30 am

கோபத்தில்
கொட்டிய
சுடுசொற்கள்
ஆறாத ரணம்தான்...
கேட்ட உனக்கும்......
சொன்ன எனக்கும் !

மேலும்

அனலி - அனலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2019 9:20 am

கண்களில் தூசு ........
கண் கலங்கினாள் காதலி.....
பதறிய காதலன் தூசியை ஊதினான்... .
கலங்கிய விழிகள் நான்கும் .......
சந்தித்தன காதலுடன்....
அப்போதும் தலை கவிழ்ந்தாள் அவள் நாணத்தால்.......
இருவருக்கும் வயது எண்பதுகளில்..........
A REAL VALENTINES DAY......

மேலும்

அனலி - அனலி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2019 6:53 pm

இன்றைய பெண்கள் திருமணத்திற்குபின் உண்மையில் மனதளவில் பாதுகாப்பாக உணர்கிறார்களா

மேலும்

நன்றி Murugan அவர்களே 03-Mar-2019 11:30 pm
பிறந்த வீட்டின் துணை ஒரு பெண்ணுக்கு எப்போதும் பெரும் பலத்தை தருகிறது நன்றி E V S அவர்களே 03-Mar-2019 11:29 pm
நிச்சயமான வார்த்தை பாத்திமா மலர் அவர்களே அது இல்லை எனில் பெண்களின் திறன் வீணாகித்தான் போகிறது 03-Mar-2019 11:26 pm
தங்கள் கருத்துக்கு நன்றி கவின் சாரலன் அவர்களே 03-Mar-2019 11:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே