ஆசையை உள்ளுக்குள்

சிந்தியுங்கள் சிறப்படைய அல்ல
வாழ்க்கையில் சீர்பெறவே
அரிதானது ஆபத்தானது எதுவென
அறிந்துக் கொள்ளவே சிந்தியுங்கள்
நமதானது எது நாடக்கூடாததெது என
நம்முள் தெளிவு பெற நன்றாய் சிந்தியுங்கள்
இலகுவானது எது இடரானது எது என அறிய
இயன்றவரை முழுதாக சிந்தியுங்கள்
சாராயம் எது இனிப்பு சாறு எது என
உண்ணு அறியாமல் பிரிக்க சிந்தியுங்கள்
அறிவு எது ஆர்ப்பரிக்கும் மனது எது என
அறிய அகப்புலனோடு அழகாக சிந்தியுங்கள்
ஆசையை உள்ளுக்குள் புதைத்து
அறியும் ஆவலை மெய் செவி வாயுக்கு வைத்தால்
மெய்யான மேன்மையை மெல்ல மெல்ல அறிவீர் நீவீர்.
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (27-Feb-19, 1:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 497

மேலே