நாமா நாயா
தொப்பென்றெச்சிலிலை கீழ் வீழுமோசை
தொங்கு செந்நா நாய்ச் செவிக்குத் தேனாய்ப் பாயும் .
குப்பிமது கோழிச்சோற்றோடு கொஞ்சம்
கொடுப்பதையும் கொடுத்துவிட்டால்
மயங்கி மக்கள்
தப்பாது தம் வலையில் வீழ்வாரென்றே
தரங்கெட்ட வேட்பாளர் கணக்கை மாற்றி
செப்பாது செயல்பாட்டில் திடமாய்க் கொண்டே
செய்திடுவோம் விலை போகா வாக்காய் நன்றே!!!
ஆதிரை சுப்பிரமணியன் பெங்களூர்