கரைதல்

கவியில் சிறந்தவர்கள் என்று கவிஞருக்கான உயரிய
விருதுகளை பெற்று தன்னகத்தே வைத்து கொண்டு

காக்கை கரைவது போல் கத்தும்
சில கயவர்களேநீங்களெல்லாம்
கவிஞர்கள் என்றால் ? திருக்குறளை இயற்றிய
திருவள்ளுவன் யார் ?

ஆத்திச்சூடியை அகிலத்திற்கு அளித்த
ஔவையார் யார் ?

காலமெல்லாம் போதாது காளமேகனின்
கவியை புரிந்து கொள்ள !!!..
அப்பேற்பட்ட காளமேகன் யார் ?

பாரதியின் வரியை கேட்டால்
செங்குறுதியும் சுதந்திரம் கேட்கும்!!!!

கம்பனின் கவியோ அவன் வீட்டு
கட்டுத்தரியையும் கவி பாட
வைக்கும் வல்லமை பெற்றது
என்று அறிந்திரிக்கிறோம்!!!!

இவ்வாறெல்லாம் கவி பாடிய
எம் கவிஞர்களின் கவிகளோ
நூற்றாண்டுகளாய் நூலகத்தில் காக்கப்படுகிறது!!!!

அவனின் நூலரிகில் உமது கரைதலை காணும்பொழுது
காற்றை விட வேகமாகம என்னுள் சினம் சீறுகிறது

உமது இழி எண்ணத்தை நினைத்து
உன் பிம்பத்தின் மீது
நீரே சேற்றை வாரி இறைத்துக்கொள்ளும்
கரையும் காக்கைகளே !!!!
இவள்
விஜயலட்சுமி

எழுதியவர் : விஜயலட்சுமி (27-Feb-19, 2:09 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
Tanglish : karaithal
பார்வை : 51

மேலே