பாதுக்காப்பவனுக்கே பாதுகாப்பில்லாதபோது

கால் கடுக்க வெயில் மழை என்று பாராமல்
கொட்டும் பனியின் இடையிலும்

பணியினை துணிந்து செய்பவன்!!!!
நாட்டுக்காக தன் உயிரை நீக்க தயாராக
இருக்கிறான்!!!

அவன் உயிர் எப்போது வேண்டுமானலும்
பறிபோகும் என்பதை நன்கறிந்தவன்

வெளிநாட்டின் சூழ்ச்சியோ ? அல்லது
உள்நாட்டின் சூழ்ச்சியோ ? - யார் அறிவார்?
இறைவன் ஒருவனைத் தவிர..

அவன் உயிர்கொடுக்க துணிந்தது நாட்டின்
நலனுக்காகவும் மக்களின் வாழ்வை காக்கவும் !!!
ஆனால் - இப்போது

இறந்தவன் ஆத்மாவால் வினவப்படுவது
அவனின் உயிரானது
அரசியல் ஆதாயத்திற்காக
அழிக்கப்பட்டதா என்பதே !!!

எவ்வளவு கெடுபுடிகள் !!! பரிசோதனைக்கா பஞ்சம்!!!
எம் பாரத நாட்டிலே !!!

இருந்தும் எளிமையாய் எமது வீரர்களின் உயிர்கள்
பறிக்கப்பட்டது !!!

பாதுக்காப்பவனுக்கே பாதுகாப்பில்லாதபோது ???????

இவள்
கீதாவின் மகள்...

எழுதியவர் : கீதாவின் மகள் (27-Feb-19, 2:36 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 117

மேலே