கொ.பெ.பி.அய்யா. - சுயவிவரம்
(Profile)
நடுநிலையாளர்
இயற்பெயர் | : கொ.பெ.பி.அய்யா. |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 09-Mar-1949 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 11166 |
புள்ளி | : 4108 |
அன்புடையீர் வணக்கம்.தரமான படைப்பு, உரமான கருத்து,வளமான எழுத்து,வரமான தமிழால் வார்ப்போம் வருக!
தனித்தமிழ்.
ஒலி பிறந்த பொழுதே
தமிழ் பிறந்தது-அது
மொழியெனப் பலவாய்
உலகம் விரிந்தது.
இயற்கை கடைந்த இசைக்கும் அமுதம்
பயிற்சி கடந்தும் பழகும் தமிழும்
இயக்கம் தனித்தும் இனிக்கும் நிலைக்கும்
முயன்றும் கலப்பும் முயற்சி பழிக்கும்.
புண்ணியம் சேர்க்கும் பொதிகை மரபே!
தன்னியம் காக்கும் தமிழின் வரவே!
அந்நியம் நோக்கும் அவலம் துறவே!
மண்ணியம் தேக்கும் மணந்தான் உறவே!
மயக்கம் விரிக்கும் மடமை ஐயோ!
வியக்கும் தமிழை விலக்கம் உய்யோ!
பயக்கும் அறிவும் படியா தமிழோ!
நயக்கும் பிறவும் நமதன்னை நிகரோ!
இப்படி நாமும் தப்படி ஆனால்
எம்மொழி வாழும் செம்மொழி தானால்.
கல்லா மொழியும் சொல்லால் மட்டும்
நி
ஆன்மிக அறிவொளி.
ஆன்மிக அறிவொளி அழகா!
நோன்மிக நெறிவழி உலகா!
மாண்மிக மதிமொழி திலகா!
தான்மிக நிதியொலி விவேகா!
சகோதர சமயம் சமைத்தவா-எழுமின்!
யுகாதர உதயம் வா! வா!
சுடராய் சோபிக்கும் சுந்தரா!
அடராய் ஆலாபிக்கும் மந்தரா!
தொடராய் துலங்கும் தத்துவா!
விடையாய் வியாபிக்கும் வித்தகா!
இறைமறை இயற்றி இணைத்தவா-விழிமின்
நிறைமுறை நிமிர்த்த வா!வா!
பழகும் மனிதம் பழக்கவா!
இளகும் புனிதம் இறுக்கவா!
இழக்கும் உறவும் பிழைக்கவா!
விலக்கும் விளக்கம் துலக்கவா!
ஆற்றும் நெறிகள் ஒடுக்கவா--உழைமின்
போற்றும் பொதுமறை ஆற்றவா!
கொ..பெ.பி.அய்யா.
கனாக் கண்டேன்!
கனாக் கண்டேன் கண்ணே!
கனாக் கண்டேன்-நம்
காதல் கனிந்துவரக் கண்ணே!
கனாக் கண்டேன்.
அலுத்துத் திண்ணையிலே கண்ணே!
அயர்ந்து தூங்கையிலே-காதல்
விழித்து உயிரிற் கண்ணே!
விடியல் காட்டியதே!
கொழுத்தச் சோலையிற் கண்ணே!
துளுத்துக் கனவிலே-நிசம்
பழுத்து மணந்து கண்ணே!
பரவிய காதலே!.
நீயும் நானுந்தான் கண்ணே!
நீரில் ஆடிவிட்டு-ஆடை
ஈரம் காயம்விடக் கண்ணே!
இறுக்கி உணத்துகிறோம்.
சேலை சுருளில் கண்ணே!
ஒளித்து ஓரமுன்னை-என்னை!
தூணாக்கி மாட்டிக் கண்ணே!
தானாய் சுழல்கிறாய்!
இலைச்சுருள் அல்வா கண்ணே!
என்கரம் நிசமோ-ஆனாலும்
தகைநான் சத்தியம் கண்ணே!
தமிழின் பத்தியம்.
காய்வதும் சே
அறிவே தாயம்மா!
அறிவே தாயம்மா!
அன்பே நீயம்மா!
சிறகே தாயம்மா!
சிந்தனை நீயம்மா!
அம்மா உன் மடியம்மா!
அது என் உலகம்மா!
அம்மா உன் தோளம்மா!
அது என் நூலம்மா!
நீதானே நானம்மா!
நிழலாக தானம்மா!
உயிராக நானம்மா!
ஊனுனது தானம்மா!
நானென்று ஏதம்மா!
நினைவெல்லாம் உனதம்மா!
நாளென்று ஏதம்மா!
நடப்பதுன் வேதம்மா!
தமிழ்தானே மொழியம்மா!
தாய்தானே வழியம்மா!
மதமென்ன மறையம்மா!
மாதாமுன் நிறையம்மா!
ஆலயம் ஏனம்மா!
அம்மாநீ தானம்மா!
பூசையும் ஏனம்மா!
போற்றநீ தானம்மா!
கொ.பெ.பி.அய்யா.
இயற்கையோடு இசைந்து வாழ்க!
சுதந்திரம் சொல்லும் விலங்கினங்கள்
வதம்பட வில்லை சுனாமியினால்.
பறவைகள் எல்லாம் அறிந்துமுன்னால்
உறவுகளோடு பறந்தன தன்னால்.
இயற்கையோடு இசைந்து வாழும்
இயல்புயென்றும் இனித்து நாளும்
ஆதிமாறா ஐந்தறி வாளும்
மேதகாறா மெய்நெறி கூறும்.
கிடைப்பது உண்டும் கிரமங்காக்கும்
அடைவது கண்டும் அரவம்நீக்கும்.
உடைப்பது ஒன்றும் உணர்விலில்லை.
படைப்பது கொன்றும் பயமறிவில்லை.
வயிற்றுக்குத் தேடும் வாழ்க்கைதான்
இயற்றுக்குக் கூடும் ஏற்கைதான்.
உடமை யென்றும் ஏதுமில்லை
கடமை மிஞ்சும் தீதுமில்லை.
இயல்பில் இணைந்தால் எதிர்வினையில்லை.
இயற்கை இழந்தால் இயக்கமில்லை.
வியந்தது விழைந்தா
ஆதியிலே வார்த்தை இருந்தது.
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
யோவான் 1:1-5
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் ஏசுவே!
ஆதியில் சத்தியம் வார்த்தை இருந்தது-அது
தேவனிடம் நித்தியம் தேவனாய் இருந்தது.
தேவனால் யாவுமாய் உருவானது.-அ
நட்பும் கற்பும்'
நட்பும் காதலும் பாலில்தான் வேற்றுமை
கற்பில் இரண்டும் பேணும்தான் ஒற்றுமை.
இருபால் அன்பில் இணைவது காதலாம்
ஒருபால் அன்பில் உறைவது நட்பாமாம்
தூய்மை தானது தொடரும் உறவாகும்.
வாய்மை தானது வளரும் அன்பாகும்.
உறவும் அன்பும் உணர்ந்து துடிப்பதாம்.
நிறையும் ஆன்மா நிறைவில் பிறப்பதாம்.
நட்பின் போலி நஞ்சுண்ட போலாகி,
தொண்டை வாயில் நின்றதும் வேலாகி,
விக்கவும் கக்கவும் வீழாது தானாகி
தொக்கிய சிக்கலாய் தீர்க்கும் காலாகி.
நட்பின் துரோகம் சமாதானம் ஆகாது.
நட்ட நினைவின் நெஞ்சம் ஆறாது
நட்புக்கும் கற்புண்டு நாசமானால் தேறாது.
நட்டமும் தற்கொண்டு நாழிகை தாங்காது.
உள்ளம் அரும்பி
புத்தாண்டே வா!வா!
புத்தாண்டே வா!வா!
சத்தாண்டு உத்தமம்
புத்தூண்ட வா!வா!
தொட்டதும் நட்டதும்
உள்ளது வாழ்த்தும்
செல்லும் ஆண்டே போ போ!
தொல்லை தொலைந்தால்
நல்லது என்போம்.
அல்லவை தொடர்ந்தால்
பொல்லது என்போம்.
சொல்லது புத்தாண்டு
வல்லதாய் வா வா!
வேண்டாம் என்றால்
விடவா போகிறாய்
வேண்டும் காலமும்
விடியட்டும் உன்னால்
புத்தாண்டு நீயும்
புகழே!வா!வா!
காலம் உன்னை
கடவுள் என்போம்.
கோலம் முன்னை
குறிப்பில் சொன்னோம்.
ஆளும் புத்தாண்டே
அழகே வா!வா!
கொ.பெ.பி.அய்யா.
பழனிக்குமார் ஐயா புத்தக வெளியிடு நேரடி ஓளிபரப்பு நடந்து கொண்டுரிக்கிறது . கண்டு மகிழுங்கள் .
http://lrswamivideos.in/welcome,aspx
www.lrswamivideos.in/unarvalaigalbook.aspx
என் நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்கள் , மேலும் வெளிநாட்டில் உள்ள நம் எழுத்து தளத்தின் நட்புகள் அனைவரும் , நான் மேலே குறிப்பிட்டுள்ள லிங்க் / வெப் சைட்டை சென்று பார்த்தால் , 12.10.2014 , ஞாயிற்றுகிழமை அன்று நம் இந்திய நேரப்படி மாலை சரியாக 5.00 மணி அளவில் இருந்து , நேரிடையாக முழு நிகழ்ச்சியும் காணலாம் .
மறவாதீர் நண்பர்களே . இந்த பதிவை பகிருங்கள் .
பழனி குமார்
ஆசை!ஆசை!
ஆசை! ஆசை!
இன்னும் வாழத்தான் ஆசை! ஆசை!
மண்ணும் போலத்தான் ஆசை!ஆசை!
எழுதிப் பிறக்கத்தான் ஆசை! ஆசை!
இயம்பிப் பறக்கதான் ஆசை! ஆசை!
ஆசை! ஆசை!
இலக்கியம் செய்யத்தான் ஆசை! ஆசை!
இறப்பை வெல்லத்தான் ஆசை! ஆசை!
எழுத்தில் இருக்கத்தான் ஆசை! ஆசை!
கருத்தில் பரவத்தான் ஆசை! ஆசை!
ஆசை! ஆசை!
உலகம் சுருங்கத்தான் ஆசை! ஆசை!
கலகம் ஒடுங்கத்தான் ஆசை! ஆசை!
அமைதி நிலைக்கத்தான் ஆசை! ஆசை!
அகிலம் தொடரத்தான் ஆசை! ஆசை!
ஆசை! ஆசை!
எழுத்தைத் துதிக்கத்தான் ஆசை! ஆசை!
எழுத்தைப் பதிக்கத்தான் ஆசை! ஆசை!
தமிழைப் படிக்கதான் ஆசை! ஆசை!
அமிழ்தைக் குடிக்கத்
அழகு! அழகு!
அழகு அழகு ஆசை அழகு
ஆசை அதுவும் அருமையானால்.
நியாயம் என்றே எதுவானாலும்
நினைபதெல்லாம் அழகேயாகும்..
அழகு அழகு பொய்யும் அழகு.
பழகும் பொய்யும் நன்மையானால்.
நிகழும் அமைதி நிலைக்குமானால்
நிசமும் பொய்யும் சமமேயாகும்.
அழகு அழகு உண்மை அழகு
அதனால் உன்முகம் ஒளிருமென்பதால்.
இயற்கை அதனில் வாழுமென்பதால்
இறையே உண்மை என்பதேயாகும்.
அழகு அழகு கோபம் அழகு.
முளைக்கும் கோபம் உண்மையானால்.
தழைக்கும் அன்பில் ஆர்வமானால்
தீவிரம் கூட தர்மம் ஆகும்.
அழகு அழகு வேகம் அழகு.
அவசியம் அவசரம் பயனேயானால்.
உயிரொன்று காக்க உதவுமானால்.
உரியநேரம் வேகம் ஆகும்.
அழகு அழகு தாமதம் அழகு.
ஆழ்ந்த