புத்தாண்டே வாவா

புத்தாண்டே வா!வா!

புத்தாண்டே வா!வா!
சத்தாண்டு உத்தமம்
புத்தூண்ட வா!வா!
தொட்டதும் நட்டதும்
உள்ளது வாழ்த்தும்
செல்லும் ஆண்டே போ போ!

தொல்லை தொலைந்தால்
நல்லது என்போம்.
அல்லவை தொடர்ந்தால்
பொல்லது என்போம்.
சொல்லது புத்தாண்டு
வல்லதாய் வா வா!

வேண்டாம் என்றால்
விடவா போகிறாய்
வேண்டும் காலமும்
விடியட்டும் உன்னால்
புத்தாண்டு நீயும்
புகழே!வா!வா!

காலம் உன்னை
கடவுள் என்போம்.
கோலம் முன்னை
குறிப்பில் சொன்னோம்.
ஆளும் புத்தாண்டே
அழகே வா!வா!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (31-Dec-15, 10:15 am)
பார்வை : 186

மேலே