நட்பும் கற்பும்
நட்பும் கற்பும்'
நட்பும் காதலும் பாலில்தான் வேற்றுமை
கற்பில் இரண்டும் பேணும்தான் ஒற்றுமை.
இருபால் அன்பில் இணைவது காதலாம்
ஒருபால் அன்பில் உறைவது நட்பாமாம்
தூய்மை தானது தொடரும் உறவாகும்.
வாய்மை தானது வளரும் அன்பாகும்.
உறவும் அன்பும் உணர்ந்து துடிப்பதாம்.
நிறையும் ஆன்மா நிறைவில் பிறப்பதாம்.
நட்பின் போலி நஞ்சுண்ட போலாகி,
தொண்டை வாயில் நின்றதும் வேலாகி,
விக்கவும் கக்கவும் வீழாது தானாகி
தொக்கிய சிக்கலாய் தீர்க்கும் காலாகி.
நட்பின் துரோகம் சமாதானம் ஆகாது.
நட்ட நினைவின் நெஞ்சம் ஆறாது
நட்புக்கும் கற்புண்டு நாசமானால் தேறாது.
நட்டமும் தற்கொண்டு நாழிகை தாங்காது.
உள்ளம் அரும்பி உணர்வும் பொருந்தி,
உள்ளே உயிரில் ஒன்றிக் கலந்து,
நட்போ காதலோ நன்றி மறந்தால்
பட்டும் பாழாகும் பண்புற வாழாது..
கொ.பெ.பி.அய்யா.