உன் மனப் பெட்டகத்துள்
என்
வார்த்தை
தூதுவிடலுக்கு
ஒரே ஒரு பார்வையில்
அழைப்பிதழ் கொடுத்த
உனக்கு
புன்னகை பூவிதழ்
அனுப்பினேன்
நீ
புரிந்து விட்டாய் போலும்
தினக்குரலில்
என் மௌனக்குரல்
கவி வடித்தது !
வார இதழில்
உன் செவ்விதழோடு
காதல் பொழிந்தது !
நீ
அடுக்கி வைத்திருக்கிறாய்
அடுக்கடுக்காய்
உன்
மனப் பெட்டகத்துள் !
பார்க்க
ஆசையாய் இருக்கிறது. ...
- பிரியத்தமிழ் -