தமிழ் உதயா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் உதயா
இடம்:  லண்டன்
பிறந்த தேதி :  13-Jul-1972
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jan-2014
பார்த்தவர்கள்:  1295
புள்ளி:  491

என்னைப் பற்றி...

தேடிக்கொண்டிருக்கிறேன் -

என் படைப்புகள்
தமிழ் உதயா செய்திகள்
தமிழ் உதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 9:33 pm

பயணத்தை
நிறுத்தாத இலைகளில்
புல்லாங்குழல் இசை
பாட்டுக் கச்சேரி
முடிக்காத
ஆழக் கடலலை,
தறி விலக முடியாத
முற்றிப் பழுத்த
பருத்திச் செடி,
கீதம் ஒலிக்கப்
பிறளாத குஞ்சுப்
பறவையினம்,
சுவாசப்பை
நிறைக்கும்
பூக்களின் வாசம்,
நெஞ்சு
குளிர்த்தும்
மழைத்தூறல்,
உதிர்ந்தும்
நம்பிக்கையுடன்
இருக்கும் மரக் கிளைகள்,
கடற்துளிகளை
அள்ளிச் செல்லும்
மேகக் குவியல்,
இப்படி பிரிந்து பிரிந்து
நீயும் நானும்
எத்தனை முறை கரையொதுங்குவது?
நுரைத்த காதலை
ஏந்திய நதியென...
கொஞ்சம் ஆசுவாசமாய்
தோள் தேடும் கேசத்தை
கோதும் விரல்களுக்கு
சிறகு முளைத்தனவா ?
நினைவு தப்பும் எனில்
விழுந்த

மேலும்

தமிழ் உதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 9:20 pm

வானவில்லை பிடுங்கி
செட்டை செய்து
பறக்கத் தொடங்கி விட்ட
பட்டாம்பூச்சி
என் முற்றத்து புல்வெளியை
தாண்டிக் குதிக்கிறது
மேலெழும்பி
தட்டித் தவழ்ந்து
எதிரே தெரியும்
தேவாலயத்தின் முகட்டில்
எட்டி உதைக்கிறது
இன்னும் பறந்து பறந்து
காற்றைக் கிழித்து
சப்தமிட்டபடி
இதழ்களில் குவிந்து
கூவி எழுகிறது
பாயும் மேகங்களை
துரத்தி இழுத்து தன்னுள்
இருத்த முனைகிறது
கவிழ்ந்து தெறித்த
துளி மழையில் நனைந்து
படிந்த கரும்புகையென
எரி நட்சத்திரமாய் விழுகிறது
சற்றே நிமிடத்தில்
வான் பறவையென மிதந்த
அந்த வைகறைப் பனித்துளியாய்
இந்த பாழாய் போன மனசு
என்னடா இது கேடுகெட்ட உசிரு. ....!
தமி

மேலும்

தமிழ் உதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 9:16 pm

நீ பரிசளித்த
இந்த இனிமையான
துயரங்களின் வலியை
அதன் ஆதிச்சுவையை
எப்போது உணர்வாயோ
அப்போதே
நீ உணர்வுகளின்
நட்சத்திரங்கள் ஒளிர்வதாய்
அன்பின் வெண்பனி உடைவதாய்
உள்மனதில் நிலவின்
கனிவு திரள்வதாய்
மனதடி வனாந்தரத்தில்
அலையும் சக்கரவாகமாய்
ஒரு மழை குடிக்கும்
கசிந்துருகும் கண்ணீரைப்
பெற்றிருப்பாய்.
அன்றே
கதிரறுக்கும்
அரிவாள் இரண்டை
முகத்தில்
இரு மருங்கிலும் சொருகி
உயிரின் துளியை வெட்டி எடுத்து
வைரங்களாய் பின்னி
நிலவென உதிர்ந்த ஒளியாய்
உன் பெயரை உச்சரிக்கிறேன்.
இப் பிரபஞ்சத்தின் நீல மலராய்
உனக்காக உன்னிடமிருந்தே
சிறகிதழ்களைப் பெற்று
என்னை மீட்டுத் தருகிறேன்.

மேலும்

தமிழ் உதயா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 9:08 pm

நினைவுகளை
கிளறிக் கொண்டிருக்கும்
இந்த நொடி முள்ளுக்கு
என் மண்
என் அம்மா
என் தோப்பு
என் கூடு
என் பள்ளி
என் புத்தகம்
என் வயல்
என் ஆறு
என் பொங்கல்
என் அலுவலகம்
என் குழந்தை
என் நீ
என்ன பெயர் வைக்க. ...?
தமிழ் உதயா

மேலும்

தமிழ் உதயா அளித்த படைப்பில் (public) kanithottam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2016 6:26 am

● ஒளி மயந்து கிடக்கிறது ●
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
என்ன பரவசம்
என் உயிர்த் துடிப்பு எதையோ
தேடிப் பேசத் துடிக்கிறது
இத்தனை குதூகலத்தோடு
பூத்து நிற்கும் ரோஜாவே
உன் இதயத்துள் புகுந்து
அதிர்ந்து துடிக்கிறது சுவாசம்
என் முற்றம்
ஒளி மயந்து கிடக்கிறது
நன்றி கூற நான்
ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்
கொய்து உன் கூந்தல் சூட
மாட்டேன் நான்
அப்படியே. ...அப்படியே
காண விளைகின்ற
ஒரு கண்ணின் விம்பத்தை
கொண்டு வந்து உன்னை
முகர வைக்கிறேன். .
அது போதும். ..அது போதும்
எனக்கு. ...!
- பிரியத்தமிழ் -
14.02.2016

மேலும்

தமிழ் உதயா - தமிழ் உதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2016 6:23 am

~ ~ ~ ~ ~ ~ ~ ~
வெண் பறவைகளின் சிறகுகள்
வருடிக் கொடுக்கும் ஆகாயம்
தடவித் தடவி
வானின் வியர்வையை
விசிறி வருடும் வண்ணத்துப்பூச்சிகள்
கணத்துக்குக் கணம் மோகித்து
சல்லாபிக்கும் ஆனந்த இரைச்சலோடு
கார் மேகங்கள்
அருகே ஈரம் கசிந்து
உருகிக் கொண்டிருக்கும்
குனிந்த தலை மலைகள்
தீண்டும் சுகத்தோடு சுரக்கும்
தென்றலின் சுகந்தம்
உச்சி முகர்ந்து சிலுசிலுப்பில்
தவழ்ந்த பச்சை மரங்கள்
நெஞ்சை நிமிர்த்தி வரும்
ஆழக் கடலலையையும்
விஞ்சி விட்ட அமைதி நதியின்
நடுக்கமின்றிய தீண்டல்
பாலைவனப் புழுதியை அள்ளும்
பரவச புயல் வெளிச்சம்
நதிக்கரைகளை மயக்கும்
அடர் வனத்தை இசைக்கும் குறுநதிகள்

மேலும்

மிக நன்றி 19-Feb-2016 3:30 am
இயற்கையின் வருடலில் நயமான காட்சிகள் 18-Feb-2016 9:56 am
தமிழ் உதயா அளித்த படைப்பில் (public) ஆசைஅஜீத் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2016 6:29 am

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡♡♡ காதல் ♡♡♡
●●●●●●●
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ அது
உனக்கும் எனக்குமான
ஆயுளின் சந்திப்பு !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ எங்கோ
கிடந்து கண்டு பிடித்த
அன்புப் புதையல் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ ஒரு
தெய்வீக மணம் வீசும்
இறை அனுபவம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ மிட்டாய் கேட்டு
அழும் குழந்தைகளின்
குதூகலம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
♡ காலமாகாத
ஓர் உன்னதமான
உயிர் இருப்பு !
-

மேலும்

பார்வை பளீச் !! 19-Feb-2016 11:05 am
நன்றி தோழா 19-Feb-2016 3:28 am
காதலின் உணர்வுகளை மாயப்படுத்தும் கவியின் காயங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2016 9:49 am
தமிழ் உதயா - தமிழ் உதயா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2016 6:31 am

●●●●●●●●●●●●●●●●
உயிரெனும் காதல் !
●●●●●●●●●●●●●●●●
• • • • • • • • • • • • • • • • • • • •
கள்ளக்காதல்
காலையில் முடிந்தது !
செல்லக் காதல்
சிணுங்கலில் முடிந்தது !
• • • • • • • • • • • • • • • • • • • • •
வல்ல காதல்
வாழ்வில் இனித்தது !
வாழாத காதல்
சாவில் கனிந்தது !
• • • • • • • • • • • • • • • • • • • • • •
சேர்ந்த காதல்
வாழ்ந்து நிறைந்தது !
சேராத காதல்
பாரம் நிறைந்தது !
• • • • • • • • • • • • • • • • • • • • • •
காவியக்காதல்
ஓவியம் ஆனது !
ஓவியக்காதல்
காவியம் ஆனது !
• • • • • • • • • • • • • • • • • • • • • •
சொல்லாத காதல்
சோகத்தில் நலிந்தது !
பொல்லாத காதல்

மேலும்

ம்ம் 19-Feb-2016 3:26 am
உண்மைக் காதல் வாழாமல் முடிந்தது என்பதே காலத்தால் உணரப்பட்ட வலிகள் 18-Feb-2016 9:47 am
தமிழ் உதயா அளித்த படைப்பை (public) சிவநாதன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Dec-2015 10:56 pm

* * * * * * * * * * * * * * * *
அது மகிழுந்துகளால்
நிறைந்து வழியும் தெருவோரம்
பாதை குறுக்கறுப்புக்காய்
ஆட்காட்டி நிறுத்தற்குறி காட்டியாய்
நடுத்தெருவில் காட்டி நின்றது
உயிர்ப்பிச்சையிட்ட
ஒற்றை உயிர் நாடி. ..
ஆறாயிரம் மைல்களுக்கப்பால்
ஆறாது அலைந்து கொண்டிருந்தது
உயிர் ஒன்று .
பாதத் தடுப்புக்களை அந்த
பாதைத் தடுப்புக் காட்டிகள்
நன்கறியும் போலும் .....
நடை தள்ளாடிய வேகத்திலும்
அதிக வேகமாய் முறைத்து நகர்கிறது
எனக்கான அந்தப் பொழுதுகள்.
இது மகிழ்ந்திருப்பது - அந்த
அலைபேசியின் அணைப்புக்களில் என்பது
மகிழுந்துகளுக்கும் தெரிந்திருக்குமோ என்னவோ. ......
தடுப்புக்கள் அழுத்தி

மேலும்

அருமை வாழ்த்துகள் 19-Dec-2015 7:19 pm
உண்மை தான் 18-Dec-2015 11:45 pm
விடையில்லாத விடுகதையாக நகர்கிறது இக்கேள்வி இம்மண்ணில் பல கோணங்களில் சிந்தித்தாலும் உறுதியான ஒரு பதில் கிடைப்பது சிரமம் தான் 18-Dec-2015 11:17 pm
தமிழ் உதயா - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2015 1:11 pm

UK வில் வாழும் பாடினி பிரியத்தமிழ் உதயாவை வாழ்த்தி,

மாடிப்பே ருந்தின்மட் டில்லாப் பெருமைதனை
நாடி நமக்களித்த நல்லாளாம் - பாடினி
லண்டன்வாழ் அன்பு பிரியத் தமிழ்உதயா
கொண்டலென வாழ்க குளிர்ந்து!

பாடினி: a woman of the பாணர் class, a songstress.
கொண்டல் - மேகம் (சூடாமணி நிகண்டு)

மதுரையில் வாழும் பிரபல கண் டாக்டர் பாலபார்வதியை வாழ்த்தி,

நல்லோ ரெலாம்போற்றும் நற்குண கண்டாக்டர்
சொல்லும் செயலிலும் சீருடைய - நல்லாளாம்
பீடுடைய சீமாட்டி பாலபார்வ தீயினன்பை
நாடுவோர் பெற்றார் நலம்!

அனுமதி இன்றியே உள்ளே நுழைந்த இனிய கவிதைகள்

அனுமதி இன்றியே உள்ளே நுழைந்த
இனிய கவிதைகள் என்ன? - முனியா(

மேலும்

வெள்ளை மனதின் வெண்பாக்கள் 18-Dec-2015 5:17 pm
மாடி பஸ்ஸை அந்நாட்டுப் பெண்களும், கறுப்பினப் பெண்களும் அனாயாசமாய் ஓட்டிச் செல்வதையும், திருப்பங்களில் லாகவமாகத் திருப்புவதையும் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறேன். அப்படி ஒரு பெண்மணியைச் சந்தித்ததும் இருவருக்கும் மகிழ்ச்சி. 10-Dec-2015 9:55 pm
மாடிப்பே ருந்தின்மட் டில்லாப் பெருமைதனை நாடி நமக்களித்த நல்லாளாம் - பாடினி ---ஆரம்ப வெண்பா மிக அருமை இனிமை. கொண்டல் குளிர்ச்சி ---அழகிய உவமை . மாடிப் பேரூந்து பெருமையை பாடலில் பாடிக் காட்டியவரா ? வாழ்த்துக்கள் கவிப்பிரிய டாக்டர் ---அன்புடன், கவின் சாரலன் 10-Dec-2015 9:26 pm
கருத்திற்கு நன்றி. 10-Dec-2015 7:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (46)

இவரை பின்தொடர்பவர்கள் (47)

ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே